Advertisment

இன்றைய நன்மையா அல்லது நாளைய சாதனையா? - பிக் பாஸ் வீட்டிற்குள் சரத்குமார் மாஸ் என்ட்ரி!

Sarathkumar enters into Bigg Boss 5 Tamil House shocks the contestants 3 லட்ச ரூபாய் இருக்கிறது. இதற்கு மேலேயும் இருக்கலாம். இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போகலாம் என்றும் நினைக்கலாம்.

author-image
WebDesk
New Update
Sarathkumar enters into Bigg Boss 5 Tamil House shocks the contestants

Sarathkumar enters into Bigg Boss 5 Tamil House shocks the contestants

Sarathkumar enters into Bigg Boss 5 Tamil House shocks the contestants : இன்னும் இரண்டே வாரங்களே உள்ள நிலையில், பிக் பாஸ் தமிழ் ஐந்தாம் சீசன் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. ஃப்ரீஸ் டாஸ்க்கில்  குடும்பத்தினரின் வருகை, சென்ற வாரம் டிக்கெட் டு ஃபினாலே என அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தக்  கட்டத்தில்,இந்த வாரம் ஓர் குறிப்பிட்ட தொகையை வைத்து, அதனை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என்கிற ஆப்ஷன் கொடுக்கப்படும்.

Advertisment

இந்த தொகையை இம்முறை பிக் பாஸ் வீட்டிற்குள் எடுத்துச் சென்றிருப்பவர் சரத்குமார். 95-ம் நாளான இன்று, ஓர் சிறப்பு நிகழ்வு அரங்கேற உள்ளது. 5 லட்ச ரூபாயைப் போட்டியாளர்கள் முன்பு வைத்துவிட்டு, 'போட்டி என்றால் வெற்றி, தோல்வி நிச்சயமாக இருக்கும். 3 லட்ச ரூபாய் இருக்கிறது. இதற்கு மேலேயும் இருக்கலாம். இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போகலாம் என்றும் நினைக்கலாம்.

அது எல்லாம் உங்கள் முடிவுதான். ஆனால், அந்த முடிவு எடுப்பதில் கவனம் தேவை. இன்றைய நன்மையா அல்லது நாளைய சாதனையா என்பதை யோசித்து முடிவெடுங்கள்' என்றுகூறி அந்த பணப் பெட்டியை வைத்து சென்றிருக்கிறார் சரத்குமார்.இந்த ப்ரோமோதான் இப்போதைய லேட்டஸ்ட் வைரல்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக இது இருக்கப் போகிறது. மூன்றாவது சீசனில் கவினும், போன சீசனில் கேபிரியல்லாவும் இந்த பரிசுத் தொகையை எடுத்துச் சென்றனர். இந்த சீசனில் யாராவது எடுத்துச் செல்வார்களா அல்லது யாரும் பயன்படுத்தாமல் இருக்கப் போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Sarath Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment