scorecardresearch

‘ஆடிக் காமிச்சேன்… சரத் 100 ரூபாய் கொடுத்தார்; ரஜினி அதுவும் கொடுக்கலையே!’

ரஜினிகாந்த், சரத் குமார் முன்பு தாம் நடனம் ஆடிய நிகழ்வை நடிகர் ராகவா லாரன்ஸ் நினைவு கூர்ந்தார்.

Sarathkumar gave Rs 100 to Raghava Lawrence
நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகரும் நடன கலைஞருமான ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். இவர் அண்மையில் ரஜினிகாந்த் பற்றிய தனது அனுபவத்தை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பகிர்ந்துகொண்டார்.
அப்போது, ஒருமுறை ரஜினிகாந்த் முன்பு ராகவா லாரன்ஸ் நடனம் ஆடி காட்டியுள்ளார். ஆனால், ரஜினிகாந்த் ஒன்றும் சொல்லவில்லை.

தொடர்ந்து, சரத் குமார் முன்பு நடனம் ஆடியுள்ளார். அப்போது சரத் குமார் 100 ரூபாய் கொடுத்துள்ளார். அப்போது அவர் 100 ரூபாய் கொடுத்தார், ஆனால் தலைவர் ஒன்றுமே கொடுக்கவில்லையை என ஏங்கியுள்ளார்.
ஆனால் அடுத்தடுத்த காலகட்டங்களில ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸ்க்கு சில வாய்ப்புகளை வழங்கியுள்ளார். இதை நினைவு கூர்ந்த லாரன்ஸ், “தலைவர் எனக்கு வாழ்க்கையை கொடுத்தார்” என்றார்.

தொடர்ந்து, ராகவா அவரது அம்மா குறித்து பேசினார். அப்போது, ஆக்ஷன் படங்களில் நடித்தால் அடிபட்டுவிடும். இதனால் பேய் படங்களில் மட்டுமே நடிப்பா என்பார் என்றார்.
மேலும் தமக்கு குழந்தைகள் பிடிக்கும். அவர்களிடம் கள்ளம், கபடம் இல்லை என லாரன்ஸ் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sarathkumar gave rs 100 to raghava lawrence