Advertisment

மகளுக்காக போட்டோகிராஃபராக மாறிய சரத்குமார்; வரலெட்சுமி நிச்சயதார்த்த வீடியோ

வரலெட்சுமி நிச்சயதார்த்தத்தில் போடோகிராபாக மாறிய சரத்குமார்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

author-image
WebDesk
New Update
varalaxmi sarathkumar

வரலெட்சுமி நிச்சயதார்த்தத்தில் போடோகிராபாக மாறிய சரத்குமார்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வரலெட்சுமி நிச்சயதார்த்தில் போட்டோகிராஃபராக மாறி சரத்குமார் புகைப்படங்கள் எடுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

நடிகர் சரத்குமாரின் மூத்த மனைவியின் மகளான வரலட்சுமிக்கு கடந்த மார்ச் 1 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரலட்சுமிக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்சி தேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிக்கோலாய் சச்சி தேவ் ஆர்ட் கேலரி தொழிலதிபராக இருந்து வருகிறார்.

நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில், வரலட்சுமிக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். நிச்சயதார்த்தைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தன்னுடைய நிச்சயதார்த்த வீடியோவை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கியூட்டான பல தருணங்கள் இடம் பிடித்திருக்கின்றன. வரலட்சுமி தன்னுடைய அம்மா, அப்பா குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் ராதிகா, ராதிகாவுடைய மகளோடு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.

இதில் மேலும் சிறப்பாக, நடிகர் சரத்குமார் தன்னுடைய மகள் வரலெட்சுமிக்கு போட்டோகிராஃபராக மாறி விதவிதமாக போட்டோ எடுத்திருக்கிறார். இதனை சரத்குமாரின் மனைவி ராதிகா ரசித்து பார்க்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்து வரலட்சுமி, ”அருமையான வாழ்த்துக்களுக்கும் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கும் அனைவருக்கும் நன்றி.. நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாகவும் அன்பைப் பெற்றவளாகவும் உணர்கிறேன்.. அழைப்பு ..மெசேஜ்.. சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் பதிவிட நேரம் ஒதுக்கிய.. உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.. என் வாழ்க்கையில் இது ஒரு புதிய பயணம்.. நீங்கள் அனைவரும் அதில் ஒரு அங்கம்.. உங்களை நேசிக்கிறேன்..

இந்த சிறப்பு நாளில் என்னுடன் இருக்க மும்பைக்கு பறந்து வந்த எனது அற்புதமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..

இதையெல்லாம் சாத்தியமாக்கிய என் நண்பர்களுக்கும் என் அன்பிற்குரியவர்களுக்கும் சிறப்பு நன்றி.. நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது..!!, என்று பதிவிட்டுள்ளார்.

இந்த கேப்ஷனுக்கு ராதிகா மிகவும் அழகு என்று பதில் அளித்துள்ளார். அதுபோல நமிதா உட்பட பல நடிகைகள் வரலட்சுமிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Varalakshmi Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment