New Update
/indian-express-tamil/media/media_files/l1vSbuG8dRH1ZHB2lB6d.jpg)
நடிகை ஜோதிகா
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்த செந்தில் தற்போது ஜீ தமிழின் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார்
நடிகை ஜோதிகா
முன்னணி நடிகையான ஜோதிகாவுடன் இணைந்து நடித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள நடிகர் மிர்ச்சி செந்தில் தனக்கும் ஜோதிகாவுக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்
மிர்ச்சி எஃப்எம்-ல் தொகுப்பாளராக இருந்து சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மிர்ச்சி செந்தில் குமரன். இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட மிர்ச்சி செந்திலக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அடுத்து விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்த செந்தில் தற்போது ஜீ தமிழின் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த தொடரில் 4 தங்கைகளுக்கு அண்ணானாக சிறப்பாக நடித்து வரும் மிர்ச்சி செந்தில் பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில்’, அண்ணா சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் மட்டுமல்லாமல் திரைப்படங்கள் மற்றும் ரேடியோவிலும் தொகுப்பாளராக இருந்து வரும் மிர்ச்சி செந்தில் அவ்வப்போது விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பிஸ்கட் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடித்துள்ள மிர்ச்சி செந்தில், அந்தப் புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் ஜோதிகாவுக்கும் தனக்கும் ஒரே மாதத்தில் ஒரே நாளில் பிறந்தநாள் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் செந்திலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.