கொரோனா லாக்டவுன் காலத்தில் சினிமா, டிவி பிரபலங்கள் பலரும் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோயின் ஸ்ரீஜாவுக்கு பிடித்த காட்சி எது என்று அவருடன் ஜோடியாக நடித்த மிர்சி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வீடுகளில் முடங்கி இருக்கும் சினிமா, டிவி நட்சத்திரங்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் ரசிகர்கள் உடனான தொடர்பை தொடர்ந்து வருகின்றனர்.
அந்த வரிசையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி முதல் சீரியலில் ஹீரோவாக நடித்த மிர்சி செந்தில் குமார் சரவணன் மீனாட்சி சீரியலில் ஹிரோயினாக நடித்த ஸ்ரீஜாவுக்கு பிடித்த காட்சி எது என்பது பற்றியும் அந்த சீரியலில் நடித்த நாட்களைப் பற்றி மலரும் நினைவுகளாக சீரியலில் இருந்து ஒரு காட்சியை பகிர்ந்துள்ளார்.
சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்கும்போது மிர்சி செந்தில்குமாரும் ஹிரோயினாக நடித்த ஸ்ரீஜாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
மிர்சி செந்தில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து கலக்கி வருகிறார்.
இந்த நிலையில், மிர்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சரவணன் மீனாட்சி சீரியலில் ஸ்ரீஜாவுக்கும் மிகவும் பிடித்த காட்சி… படப்பிடிப்புக்கு இடையே செட்டிநாடு வீடுகளை சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்பட்டோம். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். அது என்றைக்கும் மறக்கமுடியாத நாள்” என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.
வீடியோவில், மீனாட்சி, “ஆமாடா, உன்னைமட்டும்தான் புடிக்கும். உன்னை மாதிரி கோடி பேரை கொண்டுவந்து நிறுத்தினாலும் எனக்கு உன்னதான் புடிக்கும். ஏனென்றால், உன்னைதானே நான் காதலிக்கிறேன். வா போலாம்.” என்று கூறுகிறார். இந்த வீடியோவை 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Saravanan meenakshi serial mirchi senthil kumar shares video sreeja most favorite scene