/tamil-ie/media/media_files/uploads/2019/09/Sarika-Thakur-to-produce-a-movie-for-Ira-Khan.jpg)
Sarika Thakur to produce a play for Ira Khan
Sarika - Aamir Khan: நடிகை சரிகா, தற்போது ஒரு நாடக தயாரிப்பாளராக மாறியுள்ளார். அந்த நாடகத்தை நடிகர் அமீர்கானின் மகள் ஈரா கான் இயக்குகிறார். சரிகாவின் தயாரிப்பு நிறுவனமான ’நௌடன்கிசா’வுடன் இணைந்து அவரது நண்பர் சச்சின் கமானி மற்றும் அவரது இளைய மகள் அக்ஷரா ஹாசன் ஆகியோரும் இதனை தயாரிக்கிறார்கள்.
அவர்கள் ஏற்கனவே இந்தி நாடகத்தில் வேலை செய்யத் தொடங்கியுள்ள நிலையில், ஈரா இயக்குநராக அறிமுகமாகும் ஆங்கில நாடகத்தையும் தயாரிக்க இருக்கிறார்கள். ”நாங்கள் ஏற்கனவே ஒரு இந்தி நாடகத்தை தயாரிக்கும் நோக்கத்தில் இருந்தோம். அந்த சமயம் பார்த்து, ஈரா என்னை அழைத்து அவளது நாடகத்தில் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டால். நான் நடிக்க விரும்பவில்லை, அதற்கு பதிலாக நான் அதை தயாரிக்க முன்வந்தேன்” என்கிறார் சரிகா.
இதுபற்றி மேலும் குறிப்பிட்ட சரிகா, ”ஈரா என் சொந்த குழந்தையைப் போன்றவள். எனவே அவளின் இந்த முயற்சியில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைந்தேன். மேலும், நாடகத்தைப் பற்றிய அவளது பார்வை என்னை வெகுவாக ஈர்த்தது” என்றார்.
”நல்ல ஸ்கிரிப்ட்டுகள் மற்றும் பாத்திரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. நடித்து விட்டு அந்த ஸ்கிரிப்டைப் புகார் செய்வதற்கு பதிலாக, ஓய்வெடுப்பது ஒரு சிறந்த யோசனை என்று தோன்றியது. அதுதான் நடிப்பதற்கு பிரேக் விட்டுவிட்டேன்” என தான் நடிக்காமல் இருப்பதற்கான காரணத்தையும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.