சர்கார் படம் வருண் ராஜேந்திரனின் கதை தான் என்றும், படத்தில் அவர் பெயர் போட்டு நன்றி தெரிவிக்கப்படும் என்றும் ஏ.ஆர். முருகதாஸ் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக தகவல்.
சர்கார் படக்கதை விவகாரம் தொடர்பாக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டு விட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸும் ஒப்புக்கொண்டுள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சர்கார் படம் ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக்கொண்டாரா?
இறுதியில் 'சர்கார்' படம் வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையை மூலமாக கொண்டது தான் என்று ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சர்கார் படம் திரையிடும் போது, வருண் ராஜேந்திரன் பெயர் போட்டு நன்றி தெரிவிக்கப்படும் என ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
October 2018
இதையடுத்து சர்கார் பட விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சமரசம் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட காரணத்தால், தீபாவளி ரிலீஸ் லிஸ்டில் சர்கார் தடையின்றி இடம்பெறுகிறது