சர்கார் இசை வெளியீடு : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீடு விழா ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் இன்று மாலை தொடங்குகிறது.
சர்கார் இசை வெளியீடு:
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் சர்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், அக்டோபர் 2ம் தேதி ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் விழா குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருமடங்காக அதிகரித்துள்ளது. சென்னை தாம்பரத்திலுள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் இன்று மாலை பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வரும் ரசிகர்களுக்காக மூவாயிரம் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதுமுள்ள விஜய் ரசிகர்களுக்கு பல போட்டிகளை வைத்து தேர்ந்தெடுத்து இலவச நுழைவுச் சீட்டு வழங்கியுள்ளனர். சன் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்வதால் மற்ற போட்டிச் சேனல்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
மேலும், விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னணி நடிகர், நடிகைகள் பலர் கலந்துக்கொள்ள உள்ளனர். இன்று நடக்கவுள்ள 'சர்கார்' இசை வெளியீட்டு விழாவையொட்டி படத்தின் ஐந்து பாடல்கள் கொண்ட டிராக் லிஸ்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழின் பாரம்பரிய இசையையும் அதன் வரலாற்று பின்னணியையும் பற்றிய வீடியோவை வெளியிட இருக்கிறார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.