/tamil-ie/media/media_files/uploads/2018/09/d359.jpg)
விஜய்யின் சர்கார் போஸ்டர், சர்கார் வெளியீட்டு தேதி
அக்.2 சர்கார் இசை வெளியீடு: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் என்று படக்குழு இன்று அறிவித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் சர்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அக்டோபர் 2ம் தேதி ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதனை புதிய போஸ்டர் மூலம் வெளிப்படுத்தி இன்று உறுதி செய்துள்ளது படக்குழு.
The much awaited NEW POSTER of #Sarkar is out. Get ready for #SarkarKondattam. Audio from October 2nd.@actorvijay@ARMurugadoss@arrahman@KeerthyOfficial@sonymusicsouthpic.twitter.com/4Rbzi4eLOw
— Sun Pictures (@sunpictures) September 29, 2018
விஜய்யின் இந்த புதிய போஸ்டர் தான் இப்போது செம வைரல்!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.