Advertisment

இது தான் தளபதியின் சர்கார்... 2 நாளில் அள்ளிக் குவித்த வசூல்... மெர்சல் சாதனையெல்லாம் ஒன்னுமே இல்லை

Vijay's Sarkar 2nd Day Box Office Collection: தமிழகத்தில் மட்டுமே ரூ.34 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படம் சர்கார் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sarkar Tamil Movie Box Office 2nd Day Collection: சர்கார், விஜய் படம் கலெக்‌ஷன்

Sarkar Tamil Movie Box Office 2nd Day Collection: சர்கார், விஜய் படம் கலெக்‌ஷன்

Sarkar 2nd Day Collection: தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெளியாகி 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 6ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளில் ரிலீசான இப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.70 கோடி வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்தது.

Sarkar Box Office Collection : சர்கார் 2 நாளில் 100 கோடி வசூல் சாதனை

தமிழகத்தில் மட்டுமே ரூ.34 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படம் சர்கார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகளிலும் அதிகம் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் வரலாற்று சாதனை படைத்து வருகிறது. இப்படம் இரண்டே நாட்களில் ரூ.110 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

பாக்ஸ் ஆபீஸில் சர்கார் அமைத்த விஜய்... கம்முனு இருந்ததால் ஜம்முனு ஒரு வெற்றி

விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி’ திரைப்படம் 15 நாட்களில் ரூ.100 கோடி வசூலில் இணைந்தது. அதைத் தொடர்ந்து ‘கத்தி’ திரைப்படம் 12 நாட்களிலும், ‘தெறி’ படம் 6 நாட்களிலும், ‘மெர்சல்’ படம் 3 நாட்களிலும், ‘சர்கார்’ 2 நாட்களிலும் ரூ.100 கோடி வசூலை படைத்து புதிய சாதனை படைத்துள்ளது.

Tamil Cinema Actor Vijay A R Murugadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment