Sarkar Review : விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த சர்கார் படம்தான் இந்த ஆண்டின் தீபாவளி ஸ்பெஷல்! கதை விவகாரம், தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் ஆகியவற்றைக் கடந்து சர்கார் சாதிக்கிறதா? முதல்கட்ட ரிவ்வியூக்களை சிலர் பறிமாறி வருகிறார்கள். அது தொடர்பான ரிப்போர்ட் இது! தளபதி ரசிகர்கள், ‘போடுறா வெடிய!’ என கொண்டாடும் விதமாக முதல்கட்ட தகவல்கள் உற்சாகம் தருவதாகவே இருக்கின்றன.
சர்கார் படம் தீபாவளியை முன்னிட்டு நாளை தமிழகமெங்கும் வெளியாகின்ற நிலையில், துபாய் போன்ற அரபு நாடுகளில் ஏற்கனவே படம் வெளியாகிவிட்டது. படத்தை பார்த்து வந்த ரசிகர்கள் தங்களின் கருத்துகள் மற்றும் ரிவ்யூக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
Sarkar Review
சர்கார் என்ற பெயருக்கு ஏற்றது போலவே பல சமூக கருத்துகளை உள்ளடக்கிய ஒரு படமாக வெளியாகியுள்ளது சர்கார் என தங்களின் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார் ரசிகர் ஒருவர். அமீரகத்தில் வெளியான சர்கார் படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய ட்விட்டர் பகுதியில் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்திருக்கிறார் உமைர் சந்து என்ற ரசிகர்.
அதில் “ஆரம்பம் முதல் இறுதி வரை சர்கார் என்பது விஜய் பற்றியதாகவே இருக்கிறது. நிறைய சண்டைக் காட்சிகள், நல்ல திரைக்கதை, நடனம், பஞ்ச் வசனங்கள், மற்றும் விஜய்யின் மாஸ் லுக் படம் முழுவதும் இடம் பெற்றிருக்கிறது. விஜய் தன்னிடம் இருக்கும் திறமைகள் அனைத்தையும் இதில் மொத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
உலங்கெங்கிலும் ரசிகர்களின் காத்திருப்பில் சர்கார்
மெக்சிக்கோ மற்றும் இன்னும் சில அமெரிக்க நாடுகளில் இன்னும் சில மணி நேரங்களில் சர்கார் படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து தங்களின் காத்திருப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
ஸ்பெய்ன் நாட்டில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்ற சிறப்பினைப் பெற்றிருக்கிறது விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள சர்கார்.