Sarkar issue : சர்கார் படத்திற்கு எதிராக அதிமுக-வினர் போராட்டம் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்த் திரையுலகினர் பலரும் படக்குழுவிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தின் சர்ச்சை அருண் ராஜேந்திரனின் தொடங்கி அதிமுக வரை ஓயாமல் வெடித்துக் கொண்டே இருக்கிறது. முதலில் ஒரே மாதிரியான கதை என்று தொடங்கிய சர்ச்சையை கடந்து வெளியான இப்படம், தற்போது அதிமுக-வால் மற்றொரு சிக்கலை சந்திக்கிறது.
இப்படத்தில் அரசை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறி அதிமுக-வினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஸ்வரூபம் எடுத்த இந்த சர்ச்சையால் நேற்று இரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும் படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சர்ச்சை காட்சிகளை நீக்கும் பணியில் படக்குழுவினர் களமிறங்கியுள்ளனர்.
Sarkar issue : சர்கார் படத்திற்கு தமிழ் திரையுலகினர் ஆதரவு
அதிமுக-வினர் தொடங்கியிருக்கும் இந்த போராட்டம் உச்சத்தை எட்டியது. அதன் விளைவாக, நடிகர் விஜய்யின் போஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட்கள் என அனைத்தும் கிழித்து எறியப்பட்டது. மேலும் விஜய் ரசிகர்கள் பலர் மீது சட்டவிரோதமாக பேனர் வைத்த குற்றத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் இயக்குநர் முருகதாஸ் உட்பட படக்குழுவினர் பலரும் மன வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில், படக்குழுவினருக்கு ஆதரவாக தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆதரவு அளித்து வருகின்றனர். கமல், ரஜினி முதல் விஷால் ரஞ்சித் என அனைவரும் ஆதரவு அளிக்கின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் :
November 2018தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
— Rajinikanth (@rajinikanth)
தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
— Rajinikanth (@rajinikanth) November 8, 2018
நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் கமல் ஹாசன் :
November 2018முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.
— Kamal Haasan (@ikamalhaasan)
முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 8, 2018
இயக்குநர் பா. இரஞ்சித் :
November 2018#சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ “ஜனநாயகம்” அழிந்து/இழந்து போய்விட்டது என்று!!!
— pa.ranjith (@beemji)
#சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ “ஜனநாயகம்” அழிந்து/இழந்து போய்விட்டது என்று!!!
— pa.ranjith (@beemji) November 9, 2018
நடிகர் விஷால் :
“ஏ.ஆர். முருகதாஸ் வீட்டில் போலீசா? எதற்கு? தணிக்கை குழுவே இப்படத்தை வெளியிட தடை விதிக்கவில்லை மற்றும் பொதுமக்கள் இப்படத்தை பார்க்கிறார்கள். பிறகு ஏன் இந்த குமுறல்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
November 2018Police in Dir Murugadoss s home????? For Wat?? Hoping and really hoping that nothin unforeseen happens. Once again. Censor has cleared the film and the content is watched by public.den why all this hue and cry.
— Vishal (@VishalKOfficial)
Police in Dir Murugadoss s home????? For Wat?? Hoping and really hoping that nothin unforeseen happens. Once again. Censor has cleared the film and the content is watched by public.den why all this hue and cry.
— Vishal (@VishalKOfficial) November 8, 2018
இயக்குநர் நவீன் :
மெர்சல் படத்தை பாஜக விளம்பரப்படுத்தியது போல சர்கார் படத்தை அதிமுக விளம்பரப்படுத்தியுள்ளது என்று அதிமுகவை கடுமையாக சாடியுள்ளார் இயக்குநர் நவீன்.
November 2018விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்க
— Naveen.M (@NaveenFilmmaker) — Naveen Mohamedali (@NaveenFilmmaker) November 9, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.