சர்கார் கொண்டாட்டம்... 19 ஆம் தேதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்பிரைஸ்!

. #SarkarKondattam என்ற ஹாஷ்டேக்கும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 

. #SarkarKondattam என்ற ஹாஷ்டேக்கும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சர்கார் கொண்டாட்டம்

சர்கார் கொண்டாட்டம்

சர்கார் கொண்டாட்டம் : சர்காருக்காக காத்திருக்கும்  விஜய் ரசிகர்களுக்கு வரும் 19 ஆம் தேதி மிகப் பெரிய சர்ப்பிரைஸ் ஒன்றை அளிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisment

சர்கார் கொண்டாட்டம்... என்ன சர்ப்பிரைஸ் அது?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் ‘சர்கார்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாள் முதல் படம் குறித்த எதிர்பார்ப்பு  ரசிகர்களிடம் இருமடங்காக அதிகரித்துள்ளது.

ஆரம்பமே பிரச்சனை என்பது போல், போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் வெளியான போஸ்டர் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.  அரசியல் தலைவர்கள் பலரும் போர்க்கொடி தூக்க  கடைசியில் அந்த போஸ்டர் நீக்கப்பட்டது.

Advertisment
Advertisements

அதன் பின்பு சமூகவலைத்தளங்களில் நாள் தோறும் சர்கார் படம் குறித்த புதிய புதிய தகவல்கள் வெளிவந்துக்  கொண்டிருக்கின்றன.  மெர்சல் என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பின்பு வெளியாகும்  விஜய் படம் சர்கார் எனவே இந்த படத்தை விஜய் ரசிகர்கள்  வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.

சர்கார் படத்தில் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏகப்பட்ட சாதனைகளை செய்து இன்றும் நவம்பர் 1 ல் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் வரும் 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

படத்தின் முதல் சிங்கிள் அல்லது டீசர்  குறித்த அறிவிப்பு அன்று வெளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இதுக்குறித்து சர்கார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளது. #SarkarKondattam என்ற ஹாஷ்டேக்கும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Actor Vijay Sun Pictures

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: