சர்கார் படத்தின் டிக்கெட் புக்கிங் நாளை தொடக்கம்... போட்டிப்போட்டு காத்திருக்கும் தளபதி ரசிகர் படை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sarkar, சர்கார்

sarkar, சர்கார்

தளபதி விஜய் நடித்து முடித்திருக்கும் சர்கார் படம் பல சிக்கல்களை கடந்து தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இப்படத்தின் டிக்கெட் பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

Advertisment

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு மற்றும் வரலட்சுமி உட்பட பலரும் நடித்துள்ள சர்கார் படம் வரும் தீபாவளிக்கு சரவெடியாக வெடிக்கவுள்ளது. நாளை முதல் சர்கார் படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

சர்கார் தீபாவளி

ஒரு வழியாக ஒற்றுப்போகும் கதை விவகாரத்தில் இருந்து பெருமூச்சு விட்ட இப்படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறே குறித்த நேரத்தில் படம் வெளியாகும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

Advertisment
Advertisements
October 2018

படத்தின் புரொமோஷன் வேளைகளில் தீவிரம் காட்டிவந்த படக்குழுவினர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளனர். இந்நிலையில் படத்திற்கான டிக்கெட் விற்பனை தமிழகத்தில் நாளை தொடங்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Actor Vijay Diwali A R Murugadoss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: