தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள ‘ சர்கார் ’ படத்தின் முக்கிய தகவல் இன்று மாலை வெளியாக இருக்கிறது என சன் பிக்சர்ஸ் கூறியது. அதன்படி ஆடியோ லாஞ்ச் அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சர்கார் படத்தின் பாடல்கள் ஆடியோ வெளியாகிறது.
சர்கார் படத்தின் முக்கிய அறிவிப்பு:
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்த நிலையில் உள்ளது. வழக்கமாக படப்பிடிப்பு முடிந்த பிறகே போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெறும். ஆனால் சர்காரின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டே இருக்க அதே நேரத்தில் அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலையும் தீவிரமாக நடக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/sarkar-2nd-look-vijay-......jpg)
கடந்த ஜூன் 21ம் தேதி சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரை வெளியிட்டது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ். அதில் விஜய் புகைப்பிடிப்பதால், அந்த போஸ்டர் பல்வேறு சர்ச்சியையும் கிளப்பியது.
சிகரெட் பிடிக்கும் போஸ்டர் : நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
இந்நிலையில், படத்தின் மற்றொரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீடு இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி நடைபெறுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏ. ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது குறித்து சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
நடிகர் விஜய் இந்த படத்தில் பாடியிருக்கிறார் என்றும் ஒரு தகவல் வலம் வருகிறது. உண்மையா என்று காத்திருந்து பார்ப்போமே. இதற்கிடையே பகலில் அறிவித்தபடி ஆடியோ லாஞ்ச் தேதியை மாலையில் அறிவித்தது சன் பிக்சர்ஸ். அதன்படி காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் தேதி சர்கார் ஆடியோ லாஞ்ச் நடக்கிறது.