ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியானது. இப்படத்தில் இலவச பொருட்களை தீயிட்டு கொளுத்தும் காட்சி பெரும் சர்ச்சையை கிளப்பியது. அக்காட்சிகளுக்கு எதிராக அதிமுக நடத்திய போராட்டத்தின் விளைவாக படத்தில் இருந்து சர்ச்சைகுரிய காட்சிகள் நீக்கப்பட்டது.
சர்கார் சக்சஸ் பார்ட்டி : கேக் வெட்டிய விஜய்
தற்போது தியேட்டர்களில் ஓடும் அனைத்து காட்சிகளுமே சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டவையே. மேலும் இப்படம் மெர்சல் சாதனையை முறியடிக்கும் வகையில் இரண்டே நாளில் 100 கோடி வசூலை குவித்து பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்தது.
இது தான் தளபதியின் சர்க்கார்… 2 நாளில் அள்ளிக் குவித்த வசூல்… மெர்சல் சாதனையெல்லாம் ஒன்னுமே இல்லை
பல சர்ச்சைகள் எழுந்த போதிலும், இப்படம் வெற்றியைப் பெற்று தந்த காரணத்திற்காக இப்படக்குழுவினர் இணைந்து சக்சஸ் பார்ட்டி கொண்டாடினர். அதில், சார்காருக்காக ஒரு கேக் தயாரிக்கப்பட்டு, படப்பெயர் போட்டு, கேக்கின் 4 முனைகளிலும் அரசின் இலவச பொருட்கள் மிட்டாய் போல் வைக்கப்பட்டிருந்தது.
#Sarkar #SarkarTeam !! #ARRahman #Vijay @VijayFansTrends @thalapathyVFC @actorvijay pic.twitter.com/sxrHW19P9E
— PRO Kumaresan (@urkumaresanpro) 12 November 2018
இந்த கேக்கை நடிகர் விஜய் மற்றும் முருகதாஸ் இருவரும் இணைந்து வெட்டினார்கள். மேலும் இந்த பார்ட்டியில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், பாடலாசிரியர் விவேக், படத்தின் வில்லி வரலட்சுமி சரத்குமார் மற்றும் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.