scorecardresearch

இதோ வந்துடுச்சுல சர்கார் டீசர் ரிலீஸ் தேதி… வி ஆர் வெயிடிங் !!!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் டீசர் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளபதி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கத்தி திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றது. சர்கார் டீசர் தேதி அறிவிப்பு : ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் மெர்சல் காட்டிய நடிகர் விஜய்யின் பேச்சில் இருந்து இன்னும் […]

sarkar teaser release, சர்கார் டீசர்
sarkar teaser release, சர்கார் டீசர்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் டீசர் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளபதி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கத்தி திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றது.

சர்கார் டீசர் தேதி அறிவிப்பு :

ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் மெர்சல் காட்டிய நடிகர் விஜய்யின் பேச்சில் இருந்து இன்னும் வெளிவராமல் இருக்கின்றனர் சில அரசியல்வாதிகளும், ரசிகர்களும். இந்நிலையில் ரசிகர்களின் குஷியை இன்னும் அதிகரிக்க புதிய அறிவிப்பு ஒன்றை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சர்கார் படத்தின் டீசர் இம்மாதம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் பாடல் டிராக் ரிலீஸில் தொடங்கிய சர்கார் கொண்டாட்டம் தற்போது இன்னும் சூடு பிடித்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sarkar teaser release date announced