Saroj Khan death : பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான்.மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரின் இறப்பு பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் ஷாருக்கான் தொடங்கிய ஆலியாபட் வரை இவரின் நடனத்தில் ஆடாத பாலிவுட் பிரபலங்களே இல்லை எனலாம். 3 முறை தேசிய விருது வாங்கியவர். 71 வயதாகும் சரோஜ் கான் சில தினங்களுக்கு முன்பு, மூச்சு திணறல் காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சரோஜ் கான் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவலை, சரோஜ் கானின் மகள் சுகைகான் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.
சரோஜ் கான் என்று எல்லோராலும் அழைக்கப்படும் நிர்மலா நக்பால் பாலிவுட்டின் பழம்பெரும் நடன இயக்குநராவார்.2000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களில் நடனப் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.
மேலும், "இந்திய நடன பயிற்சியின் தாய்" என அழைக்கப்படும் சரோஜ் கானின் மறைவு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை குருநானக் மருத்துவமனையில் சரோஜ் கானின் உயிர் பிரிந்தது.
சரோஜ் கான் அண்மையில் கலங்க் படத்தில் மாதுரி தீக்ஷித்திற்கு தான் நடனம் அமைத்தார். சுமார் இரண்டாயிரம் பாடல்களுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார். மூன்று முறை சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.
கடைசியாக 2019ல் வெளியான 'தபா ஹோகயே' எனும் இந்திப் படத்துக்கு நடன இயக்குநராக பணியாற்றி இருந்தார். இவர் தனது மூன்று வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, குரூப் டான்சர் ஆனார். பிறகு நடன இயக்குனராக மாறினார்.
சரோஜ் கானின் மரணம் பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடலுக்கு பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செய்யவுள்ளனர். சரோஜ் கான் நடனத்தை தவிர்த்து, திரைக்கதை எழுதுவதிலும் கவனம் செலுத்தினார்.
கிலாடி, ஹம் ஹைன் பெமிசால், வீரு தாதா, சோட் சர்க்கார், தில் தேரா திவானா, ஹோட் ஹோட் பியார் ஹோ கயா, பெனாம் மற்றும் கஞ்சார் போன்ற திரைப்படங்களுக்கு சரோஜ் கான் திரைக்கதை எழுதியுள்ளார். அதைத்தவிர்த்து பாலிவுட்டில் பிரபல நடன நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.