1967-ல் திருமணம், அப்போவே 5 நாள் கொண்டாட்டம்; என்னென்ன நிகழ்வு தெரியுமா? சரோஜா தேவி த்ரோபேக் வீடியோ!

திரையுலகின் "அபினய சரஸ்வதி" என்று போற்றப்படும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, தனது வாழ்க்கையில் சந்தித்த துயரமான தருணங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.

திரையுலகின் "அபினய சரஸ்வதி" என்று போற்றப்படும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, தனது வாழ்க்கையில் சந்தித்த துயரமான தருணங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
marriage

திரையுலகின் "அபினய சரஸ்வதி" எனப் போற்றப்படும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, தனது வாழ்க்கையில் சந்தித்த ஒரு சோகமான தருணம் மற்றும் அதிலிருந்து மீண்டு வந்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். 1986-ல் தனது கணவரை இழந்த பிறகு, தான் ஆழ்ந்த மனஅழுத்தத்திற்கு ஆளானதாக அவர் பிஹைன்வுட்ஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

Advertisment

"1986யில் அவர் போயிட்டாரு. அதுக்கப்புறம் கொஞ்சம் ரொம்ப டிப்ரஷன் வந்தது," என்று அவர் தனது வேதனையை விவரித்தார். அந்த கடினமான காலகட்டத்தில், ஆண்டவனின் அருள் தனக்கு துணையாக இருந்ததாக சரோஜாதேவி குறிப்பிட்டார். "அப்புறம் மெதுவா ஆண்டவன் எப்ப விடமாட்டார். ரொம்ப டிப்ரஷன் போறதுக்கு. ஹெல்ப் பண்ணுவான் ஆண்டவன். ஆண்டவனுடைய தயவினால் மறுபடியும் நானு சரியா போயிட்டேன்," என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மேலும், தனது திருமண வாழ்க்கை குறித்தும் அவர் பேசினார். திரைப்படங்களில் பிஸியாக இருந்த காலகட்டத்தில்தான் தனக்குத் திருமணம் நடந்ததாகவும், ஐந்து நாட்கள் விமரிசையாக கல்யாணம் நடந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

"கல்யாண டைம்லயே அஞ்சு நாள் பண்ணாங்க என் கல்யாணம். ஒரு நாள் எங்கேஜ்மென்ட் ப்ரோக்ராம். அப்புறம் வளையல் எல்லாம் போடுற ப்ரோக்ராம். அந்த மாதிரி பண்ணி எங்களது சாஸ்திரோத்தமா எப்படி நடத்தணுமோ ஒரு கல்யாணம் அப்படி பண்ணாங்க," என்றார்.

Advertisment
Advertisements

திருமணத்திற்குப் பிறகும் தனது நடிப்புத் தொழிலைத் தொடர தனது கணவர் அளித்த ஆதரவையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். "கல்யாணத்துக்கு அப்புறம் வந்து கண்டிப்பா அந்த ஹஸ்பண்ட் கொடுக்கிற ஒரு ஸ்பேஸ் தான் நம்மளால வந்து திருப்பி ப்ரொபஷன் கண்டினியூ பண்ண முடியும் அப்படின்ற அவர் ஒத்துக்கிட்டாரு.

நீ ஆக்ட் பண்ணு உன் இஷ்டம் அப்படின்னு. அவர் ஒத்துக்கிட்டதுனால நான் ஆக்ட் பண்ணேன்," என்று சரோஜாதேவி தனது கணவரின் புரிந்துணர்வு மற்றும் ஆதரவால் மட்டுமே தான் திரையுலகில் தொடர்ந்து இயங்க முடிந்தது என்பதைத் தெளிவுபடுத்தினார்.  

saroja devi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: