/tamil-ie/media/media_files/uploads/2019/01/Sarvam-Thaala-Mayam-Trailer-1.jpg)
Sarvam Thaala Mayam Trailer
Sarvam Thaala Mayam Trailer : நடிகர் மற்ரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் சர்வம் தாளமயம் படத்தின் டிரெய்லரை இன்று மாலை 6 மணிக்கு நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்
ராஜீவ் மேனன் இயக்கத்தில். ஜீ.வி.பிரகாஷ் , நெடுமுடி வேணு, வினித், டிடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சர்வம் தாளமயம். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராஜீவ் மேனனின் மைண்ட் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
Sarvam Thaala Mayam Trailer : சர்வம் தாளமயம் டிரெய்லர் ரிலீஸ்
இப்படத்தின் பாடல்கள் கடந்த மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டிரெய்லரை இன்று மாலை 6 மணிக்கு தனுஷ் வெளியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
.@dhanushkraja to release the Trailer of #SarvamThaalaMayam Today 6PM #STMFromFeb1st@DirRajivMenon@arrahman@gvprakash@Aparnabala2@SF2_officialpic.twitter.com/NwufS51CXa
— Kaushik LM (@LMKMovieManiac) 28 January 2019
இந்நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி படம் ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை படத்தின் டிரெய்லர் வெளியானதை அடுத்து இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.