தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் சாத்தான்குளம் சம்பவம்

Bollywood condemn : ஸ்ரத்தா தாஸ் கபூர், வீர் தாஸ், அபிஷேக் பானர்ஜி ஹதோடா தியாகி உள்ளிட்ட பாலிவுட் திரைநட்சத்திரங்கள், சாத்தான்குளம் விவகாரத்தில், தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

By: Updated: June 28, 2020, 09:05:16 AM

சாத்தான்குளத்தில் தந்தை – மகன் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்திற்கு, பிரியங்கா சோப்ரா, டாப்ஸி பண்ணு உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் மொபைல் போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்நிலையில் காவல்துறை தாக்கியதால் மரணம் அடைந்ததாக கூறி வணிகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, கிரிக்கெட் வீரர்கள், திரை நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், பாலிவுட் திரை நட்சத்திரங்களும் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தேசிய அளவிலான பார்வைக்கு இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிரியங்கா சோப்ரா

இந்த விவகாரம் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. இது ஒரு பக்கம் கவலையை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபக்கம் இந்த கொடூர செயலை நிகழ்த்திய காவலர்களின் மீது பயங்கர கோபத்தை வரவழைத்துள்ளது. இத்தகைய கொடூர செயலை புரிந்தவர்கள் நிச்சயமாக மனிதத்தன்மையற்றவர்கள். இவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். இந்த நிகழ்விற்கு பிறகு உயிரிழந்தவர்களின் குடும்பம் என்ன பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க இயலமுடியவில்லை. அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் அனைவரும் அவர்களுக்காக #JusticeForJayarajandBennicks குரல் கொடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

டாப்ஸி பண்ணு

சாத்தான்குளம் விவகாரத்தை, மற்ற விவகாரங்கள் போல் எளிதில் கடந்துவிட முடியவில்லை. இந்த விவகாரம் குறித்து வெளிவரும் தகவல்கள் மிகுந்த பதற்றத்தை உருவாக்கியுள்ளன.

ரித்தேஷ் தேஷ்முக்

சாத்தான்குளம் விவகாரம், தேசிய அளவில் ஏற்பட்டுள்ள அவமானம் என்று பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிலியா

இந்த நிகழ்வை கேள்விபட்டவுடன் எனது இதயம் நொறுங்கிவிட்டது. என் மனதில் ஆறாதரணம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய கொடூர செயலை நிகழ்த்தியவர்கள் மனிதர்களே அல்ல.

பரினீதி சோப்ரா

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஸ்ரத்தா தாஸ் கபூர், வீர் தாஸ், அபிஷேக் பானர்ஜி ஹதோடா தியாகி உள்ளிட்ட பாலிவுட் திரைநட்சத்திரங்கள், சாத்தான்குளம் விவகாரத்தில், தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Sathankulam father son murder thoothukudi lockup deaths priyanka chopra taapsee pannu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement