சதீஷ் – சிவா சேட்டை… சிரிக்காமல் இந்த வீடியோவை பார்க்க முடியுமா?

நடிகர் சிவா கதாநாயகனாக நடித்துள்ள தமிழ்ப்படம் 2 படம் சமீபத்தில் வெளியானது. இந்தத் திரைப்படம் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் மீறி பெரிய அளவில் ஹிட் ஆனது. பொதுமக்கள் பலரும் குடும்பத்தின் சென்று இந்தப் படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் முழுவதும் தமிழ் சினிமா மற்றும் அரசியல் என பல விஷயங்களைக் கலாய்த்து ஸ்பூஃப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் காமெடியனாக நடிகர் சதீஷ் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சதிஷ் மொத்தம் 15 வேடங்களில் நடித்திருக்கிறார். இவரும் […]

tamizh padam 2
tamizh padam 2

நடிகர் சிவா கதாநாயகனாக நடித்துள்ள தமிழ்ப்படம் 2 படம் சமீபத்தில் வெளியானது. இந்தத் திரைப்படம் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் மீறி பெரிய அளவில் ஹிட் ஆனது. பொதுமக்கள் பலரும் குடும்பத்தின் சென்று இந்தப் படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்தத் திரைப்படம் முழுவதும் தமிழ் சினிமா மற்றும் அரசியல் என பல விஷயங்களைக் கலாய்த்து ஸ்பூஃப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் காமெடியனாக நடிகர் சதீஷ் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சதிஷ் மொத்தம் 15 வேடங்களில் நடித்திருக்கிறார். இவரும் நடிகர் சிவா இணைந்து நடனம் ஆடியுள்ள பாடல் வீடியோ ஒன்றைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும், இருவரின் நடனத்தைப் பார்த்து சிரித்து ரசிக்கின்றனர். தமிழ்ப்படம் முதல் பாகத்தில் சிவா பரதம் ஆடும் சீன் ஒன்று இருப்பது போலவே இந்தப் படத்திலும் இருக்கிறது. ஆனால் அது ஒரே ஒரு காட்சியாக இல்லாமல் முழுமையான பாடலாகவே வெளியாகியுள்ளது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sathish and shiva join hands together can you watch without laughing

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com