/tamil-ie/media/media_files/uploads/2019/09/Sathish-Engagement.jpg)
Sathish Engagement
Sathish Engagement: நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேஸி மோகனுக்கான திரைக்கதை எழுத்தாளராக 8 வருடங்களாக பணியாற்றியவர் காமெடி நடிகர் சதீஷ். அதன் பிறகு இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் வந்த காமெடி படமான, பொய் சொல்ல போறோம் படத்தில் உதவி வசன கர்த்தாவாக பணியாற்றினார். 2006-ல் ‘ஜெர்ரி’ என்ற படத்தில் சின்ன ரோலில், டயலாக் எதுவும் இல்லாமல் நடித்த சதிஷுக்கு, மதராசப்பட்டினம் படம் அடையாளத்தைக் கொடுத்தது.
அதன் பிறகு விஜய்யின் ’கத்தி, பைரவா’ போன்ற முக்கியப் படங்களில் நடித்தார். பெரும்பாலான சிவகார்த்திகேயன் படங்களில் நடிக்கும் சதிஷ், சிவாவின் நெருங்கிய நண்பரும் கூட. தற்போது, ’கண்ணை நம்பாதே, 100% காதல், 4ஜி, அருவம், சீறு, தீமை தான் வெல்லும், டெடி’ உள்ளிட்டப்படங்களில் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/EE6v7HbU8AEmWHp.jpg)
இந்நிலையில் தற்போது கழுத்தில் மாலையுடன் நிச்சயதார்த்த கோலத்தில் சதீஷின் படம் வெளியானது. இது குறித்து விசாரித்த போது, சதிஷுக்கும், திரையுலகைச் சேர்ந்தவரின் மகளுக்கும் தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாகவும், அரேஞ்சுடு (லவ் மேரேஜ் இல்லை) திருமணமான இதைப் பற்றி, விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து முறைப்படி சதிஷ் அறிவிப்பார் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.