X

Tamil Nadu news today updates : ஜனவரி 8-ம் தேதி நடைபெறும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 78.348க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ. 72.39 ஆகும்.

Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu news today updates : இன்று பிறந்தநாள் காணும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாடெங்கும் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக மாணவர்களும், பொதுமக்களும் போராடி வரும் சூழ்நிலையில் தனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையில்லை என்று தொண்டர்களுக்கு தெரயுவித்துள்ளர். அவரின் அறிக்கையில், ” இந்த சட்டத்திற்காக போராடிய  பல உயிர்கள் பலியாகியிருக்கின்றன. பல மாணவர்கள் காயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர். அநீதி வாழும், அறம் வெல்லும் என்று தலைவர் கலைஞர் அவர்களின் வார்த்தைகளை நெஞ்சில் நிறுத்தி, தலைவர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலோடு ஜனநாயகம் காக்க  தொடர்து போராடுவோம் என்று கூரியுள்ளார்.


நீட் தேர்வு கட்டாயமாக்கப் படுவதால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுதாக்கல் ஒன்றை செய்துள்ளது. தேசிய தகுதி-நுழைவுத் தேர்வில் (நீட்) மாநிலத்திற்கு விலக்கு கோரி, 2017 ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு மசோதாக்களையும் ஜனாதிபதி நிராகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Live Blog

Tamil Nadu news today updates : chennai weather, tamil nadu politics, TN local body election results இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

21:56 (IST)05 Jan 2020
ஜனவரி 8-ம் தேதி நடைபெறும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு

ஜனவரி 8-ம் தேதி நடைபெறும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு பதிலாக அதை பறிப்பதிலேயே மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

21:05 (IST)05 Jan 2020
டெல்லி ஜே.என்.யு.வில் முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல்; மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் காயம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று மாணவர்கள், ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் வன்முறையில், மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் காயம் அடைந்துள்ளார்.

20:22 (IST)05 Jan 2020
கே.எஸ்.அழகிரியை மாற்றினால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளரும் - கராத்தே தியாகராஜன்

கராத்தே தியாகராஜன்: ரஜினிகாந்த் தமிழகத்தின் முதலமைச்சராவது உறுதி. கே.எஸ்.அழகிரியை மாற்றினால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளரும் என்று கூறியுள்ளார்.

18:49 (IST)05 Jan 2020
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு லாந்தி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவர்களை நாளை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறது பாகிஸ்தான்.

18:00 (IST)05 Jan 2020
CAAவுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பாஜகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

CAAவுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பாஜகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். அதே போல, CAAவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, நெல்லையில் பொதுமக்கள் பேரணி நடத்தினர்.

16:46 (IST)05 Jan 2020
செப்டம்பர் 1-ம் தேதி நடந்த குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ளதாக புகார்.

15:45 (IST)05 Jan 2020
ராதாகிருஷ்ணன் கருத்து கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல - அமைச்சர்கள் கருத்து

பொன். ராதாகிருஷ்ணன் கருத்துக்கு பதில் தெரிவித்த அமைச்சார் ஜெயக்குமார். " பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல" என்று கூறியுள்ளார்.  மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி அனைத்து கட்சிகளும் தனித்தனியாக நின்று தனது செல்வாக்கை கட்டவேண்டும் என்பதும் தான் என்னுடைய கருத்து என்றும் தெரிவித்தார்.    

முன்னதாக,  முன்னாள் மத்திய அமைச்சர்,  பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன். ராதாகிருஷ்ணன், இந்த தேர்தலில் பாஜக எந்த கட்சியோடு கூட்டணி அமைக்காமல்  தனியே நின்றிருக்கலாம் என்றும், எந்த கூட்டணிக் கட்சிகள் ஆதரவு இல்லாமலும் பாஜக தனது செல்வாக்கை காட்டி இருக்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.   

14:15 (IST)05 Jan 2020
கோலம் போடும் சென்னை மாநகராட்சிக்கு ஸ்டாலின் பாராட்டு

குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு தமிழக மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்நிலையில்,  சென்னை மாநகராட்சி சென்னை நகரின் சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் முயற்சியாக,  சில இடங்களில் கோலம் போட்டு வருகிறது. இந்த முயற்சிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

14:00 (IST)05 Jan 2020
கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் பிறந்தநாள் வாழ்த்து

மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார்.  இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ,' தமிழ்நாட்டின் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நலமும் வளமும் பெற வாழ்த்துகிறேன். தாங்கள் தொடர்ந்து ஊக்கத்துடன் மக்கள் பணியாற்றி நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பீர்கள் என நம்புகிறேன்' என்று பதிவு செய்துள்ளார்.  

13:54 (IST)05 Jan 2020
திமுக வின் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மாயை போல் மறையும் - அமைச்சர்

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி திமுகவுக்கு நிலைக்காது என்றும், விரைவில் அந்த வெற்றி மறையும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.  

13:50 (IST)05 Jan 2020
அதிமுக குதிரை பேரம், ரிசார்ட்டுக்கு உறுப்பினர்களை அனுப்பும் திமுக

மதுரையில் திமுக சார்பில் வெற்றி பெற்ற  ஒன்றிய, மாவட்ட உறுப்பினர்களை குதிரை பேரம் நடக்காமல் தடுக்க புதுச்சேரியில்  உள்ள ஒரு ரிசார்ட்டில்  தங்கவைக்க பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.  

13:43 (IST)05 Jan 2020
காசெம் சுலேமானீ மறைவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம், ஒட்டுமொத்த மத்திய கிழக்கை விளிம்பு நிலைக்கு கொன்றுசென்றுவிட்டது என்றே கூறலாம்.    பிராந்தியத்திற்கு அப்பால் சாத்தியமான விளைவுகள் ஏற்படலாம். இந்த கொலை அமெரிக்காவை எதிர்ப்பதில் ஈரானை மிகவும் தீர்க்கமானதாக மாற்றும் என்று கூறப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு:  

காசெம் சுலேமானீ மறைவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

யார் இந்த மேஜர் ஜென்ரல் காசெம் சுலேமானீ?

13:39 (IST)05 Jan 2020
காசெம் சுலேமானீ மரணத்தால் உயரும் பெட்ரோல் டீசல் விலை:

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 78.348க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ. 72.39 . ஈரானிய உயர்மட்ட ஜெனரல் காசெம் சுலேமானீ  கொலைக்கு பின்னர், உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது . பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்து காணப்படுகின்றன.

13:07 (IST)05 Jan 2020
முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தார் பிரதமர் மோடி :

பாஜகவின் மூத்த தலைவரான  முரளி மனோகர் ஜோஷியின்  பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், " டாக்டர் ஜோஷியுடன் பல ஆண்டுகளாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன். என்னைப் போலவே, பலரும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டன. கட்சியை வலுப்படுத்துவதில் அவரது பங்கு மிகவும் மதிப்புமிக்கது. டாக்டர் ஜோஷியின் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவு செய்துள்ளார்.  

12:58 (IST)05 Jan 2020
உள்ளாட்சித் தேர்தலில் பாஜக நிலை என்ன?

பாரதிய ஜனதா கட்சி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1.36 சதவீதத்தை பெற்றுது என்பது குறிப்பிடத்தக்கது.  மொத்தமுள்ள 515 உறுப்பினர் பதவியில் 7 இடங்களில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது . 

12:49 (IST)05 Jan 2020
உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டிருக்கலாம் : பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜகவின்  தமிழ் மாநில தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பான கருத்துகேட்ப்பு கூட்டம், இன்று அதன் தலைமை அலுவகமான கமலாயத்தில்  நடைபெற்றது. இதில் கலந்து  கொண்ட . பின்பு, செய்தியாளர்களிடம்  பேசிய பொன். ராதாகிருஷ்ணன், " நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவை பார்க்கும் பொழுது, தமிழகத்தில்  பாஜக  காலம் தொடங்கிவிட்டது எனலாம், தமிழகத்தில் பாஜக கட்சிக்கான  வரவேற்பைத் தான் இந்த உள்ளாட்சித் தேர்தல் காட்டுகிறது" என்றார்.  மேலும், இந்த தேர்தலில் பாஜக எந்த கட்சியோடு கூட்டணி அமைக்காமல்  தனியே நின்றிருக்கலாம் என்பதே எனது தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தார்.  .     

11:17 (IST)05 Jan 2020
அமெரிக்காவை தாக்க நினைக்காதீர்கள், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

The United States just spent Two Trillion Dollars on Military Equipment. We are the biggest and by far the BEST in the World! If Iran attacks an American Base, or any American, we will be sending some of that brand new beautiful equipment their way...and without hesitation!— Donald J. Trump (@realDonaldTrump) January 5, 2020ஈரானிய புரட்சிகர காவல்படைத் தளபதியான காசெம் சுலேமானீயை கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கா படையினரால் கொல்லபட்டார். இதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டின் உயர் அதிகாரி அயதுல்லா அலி கமேனி தனது அறிக்கையில் : “அவர் கடவுளிடம் புறப்படுவதினால் அவரது பாதை மற்றும் அவரது பணி முடிவுக்குக் வருவதில்லை. அவரது இரத்தத்தையும் மற்ற தியாகிகளின் இரத்தத்தையும் தங்கள் கைகளில் வைத்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பலமான பழிவாங்கல் காத்திருக்கிறது" என்று குறிப்பிட்டு இருந்தார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமெரிக்கா அதிபர் டொனல்ட் ட்ரம்ப், " அமெரிக்கவின் தளங்கள் ஏதேனும் ஒரு தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டால் , 52 ஈரானிய தளங்களை அமெரிக்கா தாக்கும் என்று எச்சரித்துள்ளார்.

Tamil Nadu news today updates : அதிமுக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடல்நலக்குறைவால் நேற்று (ஜன.4) காலமானார். அவருக்கு வயது 74.  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சிக் காலத்தில் அதிமுகவின் முக்கிய தலைவராக வலம் வந்தவர் பி.எச்.பாண்டியன். எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது தமிழக சட்டசபை சபாநாயகருமாக பணியாற்றினார். தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கத்தில், மாதத்தில் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருந்த ரேசன் கடைகளுக்கு, இந்த மாதம் மட்டும் 3வது வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Title:

Tamil nadu news today live updates chennai weather tn politics breaking news local body election iran america india t20 darbar movie

Next
Next Story