நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படம் 'கூலி'. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா ஆகியோர் நடிக்கின்றனர்.
படத்தில் நடிப்பவர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது. படத்தில் சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரஜினியுடன் சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் இணைந்துள்ளார்.
இந்நிலையில், சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இணையத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது வில்லன் கதாபாத்திரம் குறித்து அப்டேட் கொடுத்தார். அதில், சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“