ஆரம்ப காலத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து பல படங்களில் நடித்திருந்த சத்யராஜ் ஒரு கட்டத்திற்கு மேல் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதை நிறுத்திவிட்ட நிலையில், இது குறித்து வெளியான வதந்திக்கு தற்போது சத்யராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க : Sathyaraj opens up about his rumoured feud with Rajinikanth ahead of Coolie shooting
தமிழ் சினிமாவில் அடியாளாக அறிமுகமாகி பின்னர் வில்லன் ஹீரோ என உயர்ந்தவர் சத்யராஜ். ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்த சத்யராஜ் தான், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தபோது ரஜினிகாந்துடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இதில் நான் சிகப்பு மனிதன், உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது.
தொடர்ந்து 1986-ம் ஆண்டு வெளியான மிஸ்டர் பரத் என்ற படத்தில் ரஜினிகாந்துக்கு அப்பாவாக நடித்த சத்யராஜ், அதன்பிறகு ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவில்லை. அதனால் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாகவும், அதனால் தான் சத்யராஜ் ரஜினிகாந்த் இணைந்து நடிப்பதில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும், காவிரி பிரச்சனையில், கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது சத்யராஜ் ஆற்றிய ஆவேச பேச்சு ரஜினிகாந்துக்கு குந்தகமாக கருதப்படுகிறது.
அதே சமயம் தனக்கும் ரஜினிகாந்துக்கும் இடையே அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை என்று சத்யராஜ் கூறியுள்ளார். இந்தியா க்ளிஸ் வலைதளத்திற்கு சத்யராஜ் அளித்த பேட்டியில், சிவாஜி மற்றும் எந்திரன் ஆகிய படங்களில் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதில் எனது கேரக்டருக்கு கணிசமான வாய்ப்புகள் எதுவும் இல்லை என உணர்ந்ததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “நான் ஹீரோவாக மாறிய பிறகு, இரண்டு ரஜினிகாந்த் படங்களுக்கு என்னை அணுகினர். சிவாஜி மற்றும் எந்திரன். டேனி டென்சோங்பா (சிட்டி ரோபோவை கெடுக்கும் தீய விஞ்ஞானி) வேடத்தில் நடிக்க என்னை அணுகினர். இரண்டு கேரக்டரும் எனக்கு திருப்தி அடையவில்லை. அதனால் தான் நடிக்கவில்லை. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இது குறித்து தயாரிப்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்யராஜ், கதாபாத்திரம் குறித்து எதையும் தெரிவிக்க முடியாது சொல்லவிட்டார், கூலி இப்படம் ரஜினிகாந்தின் 171வது படமாகும்.
படத்துக்கும் கடத்தலுக்கும் நிறைய தொடர்பு இருப்பது படத்தின் டீஸர் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், படத்தின் கதை மற்றும் பிற விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த் திரும்பி வந்ததும் படம் தொடங்கும். கூலி தவிர, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தில் சத்யராஜ் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.