/tamil-ie/media/media_files/uploads/2019/01/actor-arya-marriage.jpg)
actor arya marriage, நடிகர் ஆர்யா
நடிகர் ஆர்யாவின் திருமணம் ஒரு வழியாக முடிவாகி விட்டது. கடந்த வருடம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் அவர் கலந்துக் கொண்டதிலிருந்து, வெவ்வேறு போட்டியாளர்களின் பெயருடன் ஆர்யா இவரைத் தான் திருமணம் செய்துக் கொள்ளவிருக்கிறார் என செய்திகள் வெளிவரத் துவங்கின.
இந்நிலையில் கஜினிகாந்த் என்ற படத்தில் நடிகை சாயிஷாவுடன் இணைந்து நடித்தப்பிறகு, இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் விரைவில் மணம் புரிந்துக் கொள்வதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் பரவத் தொடங்கின.
இதைக் கேள்விப்பட்ட, ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’யின் போட்டியாளர்கள் ஆளுக்கொரு பக்கம், அந்த செய்தியில் உண்மையில்லை என விளக்கமளித்தனர். ஆனால் இதற்கு சம்பந்தப்பட்ட ஆர்யா - சாயிஷா இருவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
இதற்கிடையே தாங்கள் இருவரும் மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணையவிருப்பதாக ஆர்யா - சாயிஷா ஜோடி காதலர் தினத்தன்று உறுதிப்படுத்தினார்கள். இது காதல் திருமணம் தான் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, அதை மறுத்திருக்கிறார் சாயிஷாவின் தாயார் ஷகீன் பானு.
“முதலில் ஆர்யாவின் பெற்றோர்கள் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு எங்களை அணுகினார்கள். என் மகளுக்கும் அவரைப் பிடித்திருந்ததால் திருமணம் ஓகே-வானது” என்று கூறும் அவர், இந்த ஜோடி காதலில் இருந்தது, டேட்டிங் சென்றது எனும் தகவல்களை மறுக்கிறார்.
தொடர்ந்த அவர், “என் மகள் படங்களில் மிகவும் மார்டனான பெண்ணாக நடிக்கிறாள். ஆனால் அவள் உண்மையில் அவள் பாரம்பரியமானவள். படங்களில் மிகவும் ஜாலியாக இருக்கும் ஆர்யா, நிஜத்தில் ரொம்ப சீரியஸானவர்” என்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.