SCREEN Launch Live Updates: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பொழுதுபோக்கு இதழான ஸ்க்ரீன் இதழை (SCREEN) இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்குகிறது. 1951 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மிகவும் நம்பகமான திரைப்பட பத்திரிகையாக திகழ்ந்த ஸ்க்ரீன் இதழ், 11 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தலைமையில் இன்று மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மும்பையில் மாலை 6:30 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த விழாவில் தனது படம் இருக்கும் முதல் டிஜிடல் கவரை நடிகை ஷ்ரத்தா கபூர் அறிமுக செய்து வைக்கிறார். இந்த நிகழ்வில் பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் ஹிரானி மற்றும் நடிகர் விஜய் வர்மா ஆகியோரும் இணைகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை நேரலை கண்டு மகிழ நமது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Oct 18, 2024 22:35 ISTஸ்க்ரீன் இதழ் வெளியீடு: பிரபலங்கள் அனுபவம்
ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ஹிரானி மற்றும் விஜய் வர்மா ஆகியோர் ஸ்க்ரீன் இதழ் தொடக்க விழா குறித்து தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
-
Oct 18, 2024 22:05 ISTபொழுதுபோக்கு அனுபவத்தின் புதிய சகாப்தம் இங்கே தொடங்கியது
மும்பை வொர்லியில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்ற ஸ்க்ரீன் இதழின் பிரமாண்ட நிகழ்வின் போது ஸ்ட்ரீ 2 நட்சத்திரம் ஷ்ரத்தா கபூர் ஸ்க்ரீன் இதழை தொடங்கி வைத்து உலகுக்கு அறிமுகப்படுத்தினார். 1951 ஆம் ஆண்டு முதல் பொழுதுபோக்கு செய்திகள் மற்றும் ஆழமான சினிமா பகுப்பாய்வின் நேசத்துக்குரிய ஆதாரமாக, ஸ்க்ரீன் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது "நல்ல திரைப்பட இதழியலின் ரீ-என்ட்ரி" குறிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். நிகழ்வின் போது, ஸ்க்ரீன் முதல் டிஜிட்டல் அட்டையையும் ஷ்ரத்தா வெளியிட்டார்.
-
Oct 18, 2024 22:00 ISTநான் மக்களின் நினைவில் இருக்க விரும்புகிறேன்: நடிகர் விஜய் வர்மா
மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்க்ரீன் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் வர்மா தனது சினிமா பயணம் குறித்து வெளிப்படையாகப் பேசினார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் திரைப்பட விமர்சகரும் மூத்த கட்டுரையாளருமான சுப்ரா குப்தாவுடனான உரையாடலின் போது, நடிகர் பங்கஜ் திரிபாதி தனக்கு வழங்கிய ஒரு ஆலோசனையை எங்களுடன் பகிர்ந்து கொண்டார், இது IC 814 படத்தில், நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது: நான் பிரபலமாக இருக்க விரும்பவில்லை, நான் மக்களின் நினைவில் இருக்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார் என்று குறிப்பிட்டுள்ளார். IC 814 க்கு முன், விஜய் மர்டர் முபாரக் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Oct 18, 2024 21:58 ISTஉன்னைக் கண்டு பயப்படுகிறேன்: விஜய் வர்மாவை தள்ளிப்போக சொன்ன நடிகை
'கிரியேட்டர் எக்ஸ் கிரியேட்டர்' நேர்காணலின்போது, நடிகர் விஜய் வர்மா, திரையில் தனது கேரக்டர் சித்தரிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி பேசினார், அதே நேரத்தில் மக்கள் இந்த கேரக்டர்களை தனது உண்மையான ஆளுமையுடன் இணைக்கத் தொடங்கியதால் நிஜ வாழ்க்கையில் அவருக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். "அழகான பெண்கள் மற்றும் அவர்களின் தாய்மார்கள் என்னைப் பார்த்து பயப்படுவதாக என்னிடம் கூறியுள்ளனர். இது என்னைத் தொந்தரவு செய்தது. நான் நடித்த மிகவும் கொடூரமான மனிதர்களின் அறிமுகம் பிங்க் திரைப்படத்தில் தொடங்கியது. இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டர் தான் என்றாலும் கூட, இது முழுக்க முழுக்க பெண்களுக்கான பிரச்சனை குறித்த படம். எனக்கு தெளிவாக நினைவில் உள்ளது. அனைத்து நடிகைகளும் கலந்து கொண்டனர், இதற்கு முன்பு நான் திரையில் மட்டுமே பார்த்தவர்களை அந்த படத்தின்போது நேரில் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது." இந்த படத்தின் வெளியீட்டுக்கு மமுன், அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர், ஆனால் இறுதியில், சிலர் அழுதனர், சிலர் அங்கிருந்து வெளியே போக விரும்பவில்லை. நான் சுனிதி சவுகானை ஆறுதல்படுத்த முயற்சித்தேன், ஆனால் அவர் என்னிடம், 'என் அருகில் வராதே. நான் மிகவும் சோகமாக இருக்கிறேன். உன்னைக் கண்டு பயப்படுகிறேன் என்று சொன்னார். அப்போது 'கடவுளே, என்ன நடந்தது என்று நான் என்னையே கேட்டுக்கொண்டேன். பின்னர் இயக்குனர் என்னை பார்த்து உனது கேரக்டர் நன்றாக இருக்கிறது என்று கூறியதாக விஜய் வர்மா தெரிவித்துள்ளார்.
-
Oct 18, 2024 21:41 IST'நான் இன்னும் என் பெற்றோர் மற்றும் என் செல்லப்பிராணிகளுடன் வாழ்கிறேன்: ஷ்ரத்தா கபூர்
மும்பையில் நடந்த ஸ்க்ரீன் வெளியீட்டு விழாவில், பங்கேற்ற பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தனது வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் அவரது வாழ்க்கையில் அவரது குடும்பம் வகித்த பங்கு பற்றி மனம் திறந்து பேசினார். இதில், "நான் இன்னும் என் பெற்றோர் மற்றும் எனது செல்லப்பிராணிகளுடன் வாழ்கிறேன். எனது முழுப் பயணமும் திரையுலகில் ஒரு சிறந்த காலமாக இருந்தது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். என் பெற்றோர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்கள். தோல்வி என்பது ஒரு பெரிய ஆசிரியர் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் நான் இருக்கும் இடத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் ," என்று கூறியுள்ளார்.
-
Oct 18, 2024 21:38 ISTசமூகவலைதளங்கள் அற்புதமாக ஊடகம்: ஷ்ரத்தா கபூர்
தனது ரசிகர்களுடன் இணைவதற்கான ஒரு அற்புதமான ஊடகமாக சமூக ஊடகங்கள் இருப்பதாக கூறியுள்ள, ஷ்ரத்தா கபூர், "பல ஆண்டுகளாக, நாங்கள் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும் ஏ.ஐ. டெக்னாலஜி குறித்து பேசிய, ஷ்ரத்தா கபூர், நேர்மறையான வழியில் பயன்படுத்தினால், ஏ.ஐ. சினிமா அனுபவத்தை மேம்படுத்த முடியும் என்று கூறினார். "நீங்கள் இப்போது தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டனுக்குச் சமமான ஒன்றை உருவாக்கி, ஆக்கப்பூர்வமாக ஏ.ஐ. ஐப் பயன்படுத்தினால், அது ஒரு கேரக்டராக மாறும் என்று கூறியுள்ளார்.
-
Oct 18, 2024 21:35 ISTசினிமாவில் 'அதிக பரிசோதனை செய்ய ஒரு இடம்: ஷ்ரத்தா கபூர்
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் செயல் இயக்குநரும், தி இந்தியன் எக்ஸ்பிரஸில் நியூ மீடியா தலைவருமான ஆனந்த் கோயங்கா தொகுத்து வழங்கிய ரேபிட்-ஃபயர் பிரிவில், ஷ்ரத்தா கபூரிடம், அவர் அறிமுகமான நேரத்தில் இருந்து சினிமாவில் என்ன முன்னேற்றம் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, இப்போது, ஒருவருக்கு அதிக பரிசோதனை முயற்சிகள் செய்ய இடம் உள்ளது என்று கூறினார்.
-
Oct 18, 2024 21:33 ISTஅவர் சக்தி கபூரின் மகள், அவர் பெரிய வில்லன்: பள்ளி நாட்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்ட ஷ்ரத்தா கபூர்
மும்பை, வொர்லியில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற ஸ்க்ரீன் இதழின் தொடங்க விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் எண்டர்டெயின்மென்ட் எடிட்டரான ஜோதி ஷர்மா பாவாவுடன் உரையாடலில் பங்கேற்றார். அப்போது நடிகர் சக்தி கபூர் மற்றும் ஷிவாங்கி கோலாபுரே ஆகியோரின் மகளாக கவனத்தை ஈர்ப்பது அசாதாரணமாக உணர்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஷ்ரத்தா, தனது பள்ளி நாட்களிலிருந்தே அது பழகியதாக கூறியுள்ளார்."பள்ளியில், 'அவள் சக்தி கபூரின் மகள். அவர் ஒரு பெரிய வில்லன், உங்களுக்குத் தெரியுமா, அவளைச் சுற்றி கவனமாக இருங்கள்' என்று எல்லோரும் சொல்வார்கள். ஒரு திரைப்பட குடும்பத்தின் ஒருவராக இருந்தபோதிலும், அது ஒருபோதும் நான் பெரியதாக உணரவில்லை, ஏனென்றால் என்னுடன் சினிமாத்துறையை சார்த்த யாரும் இல்லை என்று கூறியுள்ளார்.
-
Oct 18, 2024 21:10 ISTஆவலுடன் இருக்கும் சஞ்சய் தத்: முன்னா பாய் 3 பற்றி மனம் திறந்த ராஜ்குமார் ஹிரானி
இந்தியில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற முன்னா பாய் எம்.பி.பிஎஸ் மற்றும் முன்னா பாய் 2 ஆகிய படங்களை தொடர்ந்து, முன்னா பாய் வரிசையில், மூன்றாவது படத்தை தயாரிப்பது பற்றி பேசிய ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் தத் மீண்டும் அந்த கதாபாத்திரத்திற்கு வர ஆவலுடன் இருக்கிறார். “முன்னா பாய் படத்துக்கான ஐந்து ஸ்கிரிப்ட்கள் பாதியில் நிற்கின்றன என்று கூறியுள்ளா.
-
Oct 18, 2024 21:08 ISTஎன் அருகில் வராதே: விஜய் வர்மாவுக்கு செக் வைத்த நடிகை
ஸ்க்ரீன் இதழின் பிரமாண்டமான வெளியீட்டு விழாவில், பங்கேற்றுள்ள நடிகர் விஜய் வர்மா எதிர்மறையான கேரக்டர்களில் நடிப்பதைப் பற்றியும், இந்தப் பாத்திரங்களால் பெண்கள் தன்னைப் பார்த்து எப்படி பயப்படுகிறார்கள் என்பதையும் பகிர்ந்துகொண்ட அவர், என் அருகில் வராதே என்று சுனிதி சவுகான் கூறியதாக தெரிவித்துள்ளார்.
-
Oct 18, 2024 20:53 ISTஷாருக்கானுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி ராஜ்குமார் ஹிரானி
"ஷாருக்குடன் பணிபுரிவது முற்றிலும் மதிப்புக்குரியது. அவர் மிகவும் கவர்ச்சியான மனிதர், அவர் செட்டில் நிறைய நேர்மறையான விஷயங்களை செய்யக்கூடியவர். அவர் உள்ளே வந்தாலே செட்டே மகிழ்ச்சியாக இருக்கும். நான் எப்போதும் அவர் ஒரு முன்னோடியான நடிகர் என்று நினைத்தேன். ஆனால் அவர் தனது கேரக்டர்களுக்கு எப்போதும் மிகவும் தயாராக இருப்பார். இது ஒரு இயக்குனருக்கு எப்போதும் நல்லது" என்று ராஜ்குமார் ஹிரானி கூறியுள்ளார்.
-
Oct 18, 2024 20:32 ISTசினிமா ஒரு கூட்டு முயற்சி, அதை பணத்தால் மதிப்பிடுவது சோகமானது: ராஜ்குமார் ஹிரானி வருத்தம்
ஸ்க்ரீன் வெளியீட்டு விழாவில், பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்கள் உண்மையானதா இல்லையா என்பது குறித்து கேட்ட கேள்விக்கு, இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி பதில் அளிபபதை தவிர்த்தார். இயக்குனர், "சினிமாவை மதிப்பிடுவது ஒரு சோகமான வழி. இது ஒரு கூட்டு முயற்சி, நாங்கள் பல வருடங்கள் உழைத்து ஏதாவது ஒன்றை உருவாக்குகிறோம், அதை பணத்தால் மதிப்பிடுவது சோகமானது." இது எங்களைப் பாதிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
-
Oct 18, 2024 20:29 ISTஎன்னை நான் பெரிய திரையில் பார்க்க விரும்புகிறேன்: நடிகர் விஜய் வர்மா ஆவல்
ஸ்க்ரீன் இதழ் வெளியீட்டு விழாவில், பேசிய நடிகர் விஜய் வர்மா கொரோனா தொற்றுநோய் வருவதற்கு முன்பு எனக்கு ஒரு படம் திரையரங்கில் வெளியாக இருந்தது. எனக்கு வருடத்திற்கு 2-4 படங்கள் வெளியாகும். ஆனால் அவை அனைத்தும் ஒடிடி ஸ்ட்ரீமர்களில் உள்ளன. ஆனால் ஸ்ட்ரீமிங் தளங்களில் நான் சிறந்த பார்வையாளர்களைக் கண்டேன், அதே சமயம் என்னை நான் பெரிய திரையில் பார்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
-
Oct 18, 2024 20:28 ISTபார்வையாளர்களை இழுக்க நன்றாக இருக்க வேண்டும் அதுதான் நல்ல படம்: ராஜ்குமார் ஹிரானி
ஒரு நல்ல படம் என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள இயக்குனர், ராஜ்குமார் ஹிரானி, "படத்தின் அளவு உண்மையில் வேலை செய்வதல்ல, ஆனால் படம் பார்வையாளர்களை இழுக்க நன்றாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
Oct 18, 2024 20:25 ISTதகுதியான நபர்களுக்கே ஸ்க்ரீன் விருதுகள் வழங்குகிறது: விஜய் வர்மா
"ஸ்க்ரீன் விருதுகளை விடாமுயற்சியுடன் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. அது தகுதி சார்ந்த விருதுகள் போல் தோன்றியது. உண்மையில் தகுதியான நபர்களுக்கு விருதுகள் வழங்குகின்றன" என்று விஜய் வர்மா கூறியுள்ளார்.
-
Oct 18, 2024 20:03 ISTராஜ்குமார் ஹிரானி திரை பயணம் பற்றி பகிர்ந்துகொண்டார்
கிரியேட்டர் x கிரியேட்டர் அமர்வின் போது, பேசிய இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி தனது குடும்பத்தினர் ஒரு திரைப்பட இதழைப் பற்றி விவாதித்ததில்லை, ஆனால் அது செய்தித்தாள் வடிவத்தில் வந்ததால் ஸ்க்ரீன் பற்றி பேசியிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் முன்னா பாய் 3 படத்திற்காக பாதியாக எழுதப்பட்ட பல ஸ்கிரிப்டுகள் தன்னிடம் இருப்பதாக பகிர்ந்து கொண்டார்.
-
Oct 18, 2024 20:01 ISTஸ்க்ரீன் வெளியீட்டு விழா மேடையில் ராஜ்குமார் ஹிரானி, விஜய் வர்மா
ஸ்க்ரீன் வெளியீட்டு விழாவில், தற்போது பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மற்றும் பல்துறை நடிகர் விஜய் வர்மா ஆகியோர் இப்போது கிரியேட்டர் x கிரியேட்டர் அமர்வுக்கு மேடை ஏறியுள்ளனர். இந்த பகுதியை திரைப்பட விமர்சகரும் இந்தியன் எக்ஸ்பிரஸின் மூத்த கட்டுரையாளருமான சுப்ரா குப்தா தொகுத்து வழங்குகிறார்.
-
Oct 18, 2024 19:59 ISTதூம் 4 படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து ஷ்ரத்தா கபூர் பதில்
ஸ்க்ரீன் வெளியீட்டு விழாவில், பேசிய ஷ்ரத்தா கபூர், "சம்பள சமத்துவம் உள்ளது. முன்பை விட எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. கடந்த 14 வருட சினிமா வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு விஷயம் எனக்கு "அதிக வாய்ப்புகள்" கிடைத்தது தான். சமூக வலைதளங்கள் எனது ரசிகர்களுடன் ஒரு அற்புதமான தொடர்பை ஏற்படுத்த எனக்கு உதவுகிறது. "சில நேரங்களில், நான் யாரையாவது தவறுதலாகப் பின் தொடர்வதாக உணர்ந்தேன், பின்னர் நான் அவர்களைப் பின்தொடர்வதை நிறுத்திக்கொண்டேன். தூம் 4 படத்திற்கு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்கிறார்கள். நான் எந்தப் படத்திலும் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யவில்லை. இந்த வதந்திகள் எங்கிருந்து வந்தன என்பதும் எனக்குத் தெரியாது என்று பதிவிட்டுள்ளார்.
-
Oct 18, 2024 19:44 ISTஸ்க்ரீன் இதழின் முகமாக மாறிய ஷ்ரத்தா கபூர்
புத்தம் புதிய பொலிவுடன் ஸ்க்ரீன் இதழை வெளியிட்ட நடிகை ஷ்ரத்தா கபூர் இதழின் முதல் டிஜிட்டல் அட்டையின் முகமாகவும் மாறியுள்ளார். தற்போது 'ஸ்கிரீன் லைவ்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார், ஜோதி ஷர்மா பாவா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் எண்டர்டெயின்மென்ட் எடிட்டர், ஜோதி ஷர்மா பாவாவுடன் உரையாடலில் ஈடுபட்டு, தனது வாழ்க்கை, தொழில் மற்றும் நட்சத்திரம் பற்றி பேசி வருகிறார்.
-
Oct 18, 2024 19:40 ISTஎனது ரசிகர்களுடன் உரையாட அதிகம் விரும்புகிறேன்: ஷ்ரத்தா கபூர்
புத்தம் புதிய ஸ்க்ரீன் இதழை வெளியிட்ட ஷ்ரத்தா கபூர் பேசுகையில், சமூக ஊடகங்களில் எனது ரசிகர்களுடன் உரையாட நான் விரும்புகிறேன். நான் கருத்துகளை விரும்புகிறேன் மற்றும் எனக்கு மிகவும் நல்ல நேரம் உள்ளது. எனது சமூகவலைதள கணக்குகளை நானே கையாளுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தனக்கு விச்சித்திரமான காதல் வேண்டும் நான் அரைகுறை காதலியாக இருக்க விரும்பவில்லை. ஒரு நடிகையாக நான் உண்மையிலேயே நிறைவாக உணர்ந்த படங்களில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
-
Oct 18, 2024 19:29 ISTவெற்றிக்கு தோல்வி மிகவும் அவசியம்: ஷ்ரத்தா கபூர்
புத்தம் புதிய ஸ்க்ரீன் இதழை வெளியிட்ட ஷ்ரத்தா கபூர் "நான் இன்னும் என் பெற்றோர், என் சகோதரர் மற்றும் என் நாய்களுடன் வாழ்கிறேன். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஆனால் வெற்றிக்கு தோல்வி மிகவும் அவசியம் என்று நான் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
-
Oct 18, 2024 19:24 ISTபுத்தம் புதிய ஸ்க்ரீன் இதழை வெளியிட்ட ஷ்ரத்தா கபூர்
ஷ்ரத்தா கபூர் புத்தம் புதிய ஸ்க்ரீன் இதழை வெளியிட்டார் மற்றும் அதன் முதல் டிஜிட்டல் அட்டையின் முகமாகவும் மாறியுள்ளார். தற்போது 'ஸ்கிரீன் லைவ்' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவர், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் எண்டர்டெயின்மென்ட் எடிட்டர், ஜோதி ஷர்மா பாவாவுடன் உரையாடலில் ஈடுபட்டு, தனது வாழ்க்கை, தொழில் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பற்றி விவாதிக்கிறார், குறிப்பாக ஸ்ட்ரீ 2 படத்தின் வெற்றி மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்தும் பேசியுள்ளார்.
-
Oct 18, 2024 19:22 ISTசெல்ஃபி வீடியோவில், வாழ்த்து தெரிவித்த அமிதாப் பச்சன்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள ஒரு செல்ஃபி வீடியோவில், ஸ்க்ரீன் மீண்டும் தொடங்கும் சந்தர்ப்பத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் ஸ்க்ரீன் உடனான எனது தொடர்பு மிக நீண்டது. 60களின் பிற்பகுதியில் நான் திரையுலகில் சேர்ந்தபோது, ஸ்க்ரீன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதன் அளவு மிகப் பெரியதாக இருந்ததால், அதை செய்தித்தாள் அல்லது பத்திரிகை என்று அழைப்பதா என்று எனக்குத் தெரியவில்லை. மற்ற திரைப்பட இதழ்களைப் போலல்லாமல், இயக்குநர்கள் தங்கள் திரைப்படங்களுக்கு வெளியிடப்பட்ட விளம்பரங்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தன கிசுகிசுக்கள் அல்லது கேலிகள் இல்லை; திரைப்படத் துறையைப் பற்றி நல்ல எழுத்துக்கள் மட்டுமே இதில் இருந்தன," என்று அவர் கூறினார்.
-
Oct 18, 2024 19:06 ISTநல்ல திரைப்பட இதழியல் என்பது மரியாதைக்குரியது: அனந்த் கோயங்கா
ஸ்க்ரீன் வெளியீட்டு விழாவில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் செயல் இயக்குநரும், தி இந்தியன் எக்ஸ்பிரஸின் நியூ மீடியா தலைவருமான அனந்த் கோயங்கா பேசுகையில், "ஸ்க்ரீன் ஒரு நல்ல திரைப்பட இதழியல். நல்ல திரைப்பட இதழியல் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்ல திரைப்பட இதழியல் என்பது மரியாதைக்குரியது, எதற்கும் பணியாதது அல்ல. நல்ல திரைப்பட இதழியல் நட்சத்திரங்களுடன் நட்பாக விரும்புவதில்லை திரைப்படப் பத்திரிக்கையானது பொதுமக்களுக்கு முதலில் சேவை செய்யும் ஒருமைப்பாட்டைக் கொண்டுள்ளது, அதற்கான ஒரு புது முயற்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
-
Oct 18, 2024 18:50 ISTநிகழ்ச்சி மேடைக்கு வந்த ஷ்ரத்தா கபூர்
இறுதி திரை அனுபவத்திற்கு நீங்கள் தயாரா? ஸ்க்ரீன் தொடங்க விழாவிற்கு, எங்கள் சிறப்பு விருந்தினரான ஷ்ரத்தா கபூர் வந்திருப்பதால், பிரமாண்டமான ஸ்க்ரீன் வெளியீட்டு நிகழ்வு மும்பை வோர்லியில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. நேரலையில் பார்க்க
-
Oct 18, 2024 18:49 ISTஸ்க்ரீன் மீண்டும் வருவதை எதிர்நோக்கும் கரிஷ்மா கபூர், டாப்ஸி பண்ணு
ஸ்க்ரீன் மீண்டும் வருவதை பார்த்து மனோஜ் பாஜ்பாய் மட்டும் உற்சாகமாக இருக்கிறார் என்று நினைத்தீர்களா? பாலிவுட்டின் ஷாஹென்ஷா அமிதாப் பச்சன் மற்றும் கரிஷ்மா கபூர் போன்ற ஜாம்பவான்கள் முதல் டாப்ஸி பண்ணு மற்றும் சோனாக்ஷி சின்ஹா போன்ற தற்போதைய நட்சத்திரங்கள் வரை, அனைவரும் எங்களின் பிரமாண்டமான மறுபிரவேசத்திற்கான உற்சாகத்தில் மும்முரமாக உள்ளனர்.
-
Oct 18, 2024 18:20 ISTஸ்க்ரீன் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி: நடிகர் மனோஜ் பாஜ்பாய்
சினிமாவின் பல்வேறு அம்சங்களைப் புதுமையான மற்றும் ஆழமான ஆய்வுக்கு நன்றி, சிந்தனைமிக்க முறையில் திரைப்படங்களில் ஈடுபடும் மற்றும் பகுப்பாய்வு செய்யும் புதிய தலைமுறை திரைப்பட ஆர்வலர்களை வளர்ப்பதில் ஸ்க்ரீன் முக்கிய கருவியாக உள்ளது. இது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறிய நடிகர் மனோஜ் பாஜ்பாய், "நான் வளரும்போது, செய்தித்தாள் வடிவில் இருந்த ஸ்க்ரீன் பத்திரிக்கையை நாங்கள் வாங்கினோம். அந்தக் காலத்து ஸ்க்ரீனைப் பற்றிய நினைவுகள் இன்னும் உள்ளன. நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஒவ்வொரு இதழிலும் புதிய மற்றும் வரவிருக்கும் படங்களின் போஸ்டர்களை பார்க்க வேண்டும், மேலும் அதில் சில அரிய நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன, ஸ்க்ரீன் மீண்டும் வந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், "என்று கூறியுள்ளார்.
-
Oct 18, 2024 18:15 ISTராஜ்குமார் ஹிரானி, விஜய் வர்மா பங்கேற்கும் 'கிரியேட்டர் x கிரியேட்டர்'
ஸ்க்ரீனின் பிரமாண்டமான வெளியீட்டுக்கு இன்னும் சில நிமிடங்களில் உள்ளன. மேலும் உங்களிடமிருந்து உற்சாகம் வெளிப்படுவதை எங்களால் உணர முடிகிறது. நடிகை ஷ்ரத்தா கபூர் புத்தம் புதிய ஸ்க்ரீன் இதழை வெளியிட்டதைத் தொடர்ந்து, அதன் முதல் டிஜிட்டல் அட்டையை அலங்கரிக்கும், எங்கள் தனித்துவமான 'கிரியேட்டர் x கிரியேட்டர்' அமர்வை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது நேரடியாக பார்வையாளர்களுக்கு முன்னால் நடைபெறும். முதல் முறை. இந்த பிரிவில், முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ் மற்றும் ஷாருக்கான் நடித்த டுங்கி போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கியதற்காக புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் ஹிரானி, சமீபத்தில் நெட்ஃபிக்ஸ் இன் ஐசி 814 இல் தோன்றிய விஜய் வர்மாவுடன் உரையாடலில் ஈடுபடுவார்.
-
Oct 18, 2024 18:13 ISTஅமிதாப், ஷாருக் 4 முறை: வித்யா பாலன் 5 முறை; ஸ்க்ரீன் விருதை அதிகம் வென்ற நட்சத்திரங்கள்
ஷாருக்கான், அமிதாப் பச்சன் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் தலா 4 முறை சிறந்த நடிகருக்கான ஸ்க்ரீன் விருதை வென்றுள்ளனர், அதே நேரத்தில் வித்யா பாலன் 5 முறை சிறந்த நடிகைக்கான ஸ்க்ரீன் விருது வெற்று சாதனை படைத்துள்ளார். அவர் 2010 முதல் 2013 வரை தொடர்ச்சியாகவும், 2018 ஒருமுறையும் ஸ்க்ரீன் விருதையும் பெற்றார். சஞ்சய் லீலா பன்சாலி மட்டுமே சிறந்த இயக்குனருக்கான ஸ்கிரீன் விருதை மூன்று முறை வென்ற ஒரே இயக்குனர் ஆவார், இது விழாவின் வரலாற்றில் ஒரு சாதனையாகும். அசுதோஷ் கோவாரிகர் மூன்று படங்களை இயக்கியுள்ளார், அவை சிறந்த திரைப்படங்கள் என்று கௌரவிக்கப்பட்டன. குறிப்பிடத்தக்க வகையில், தங்கல் மற்றும் கல்லி பாய் ஆகியவை தலா 12 விருதுகளுடன், அதிக விருதுகளை வென்றதற்கான சாதனையைப் படைத்துள்ளன.
-
Oct 18, 2024 18:10 ISTமுதல் ஸ்க்ரீன் விருதுகளில் சிறந்த நடிகர் நடிகைக்கான விருதை வென்ற நானா படேகர், மாதுரி தீட்சித்
மதிப்புமிக்க ஸ்க்ரீன் விருதுகள் ஸ்க்ரீன் இதழால் நிறுவப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியாவிட்டால், எங்கள் விருது விழாக்களைப் பற்றி உங்கள் பெரியவர்களிடம் கேட்பது மதிப்புக்குரியது. அவை உண்மையிலேயே பொழுதுபோக்கு நாட்காட்டியின் சிறப்பம்சமாக இருந்தன. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லன் மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்குகிறோம். 1995 இல் முதன்முதலில் ஸ்கிரீன் விருதுகள் நானா படேகர் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றாலும், ஹம் ஆப்கே ஹைன் கவுன் (HAHK) திரைப்படத்தில் நடித்ததற்காக மாதுரி தீட்சித் சிறந்த நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு, HAHK சிறந்த திரைப்படமாகவும் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் சூரஜ் பர்ஜாத்யா சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றார்.
-
Oct 18, 2024 18:07 ISTஸ்க்ரீன் 2.0 ஐ வெளியிடு ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ஹிரானி மற்றும் விஜய் வர்மா
மும்பையின் வொர்லியில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் இன்று நடைபெறும் ஸ்க்ரீன் இதழ் வெளியீட்டு விழாவில், இதழ் அதிகாரப்பூர்வமாக அதன் வாசகர்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். இந்த நிகழ்வில், ஸ்ட்ரீ 2 நட்சத்திரம் ஷ்ரத்தா கபூர் ஸ்க்ரீன் 2.0 ஐ வெளியிடுவார். இந்த நிகழ்வில் எங்கள் கையொப்பம் 'கிரியேட்டர் x கிரியேட்டர்' அமர்வு இடம்பெறும், இது முதல் முறையாக நேரலை பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்படும். இந்த அமர்வின் போது, முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ் மற்றும் ஷாருக்கானின் டன்கி போன்ற பிளாக்பஸ்டர்களுக்கு பெயர் பெற்ற பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி,, சமீபத்தில் நெட்ஃபிளக்ஸில் வெளியான IC 814 இல் தோன்றிய விஜய் வர்மாவுடன் அவர்களின் கலை, தத்துவம், செயல்முறை மற்றும் தொழில் பற்றி விவாதிப்பார்.
-
Oct 18, 2024 18:04 ISTஸ்க்ரீன் இதழை எதிர்நோக்கிய முந்தைய காலத்தை எதிர்காலத்தில் கொண்டு வருகிறோம்
ஸ்க்ரீன் இதழின் மறுதொடக்கத்தைக் குறிக்கும் இன்றைய நிகழ்வை நெருங்க நெருங்க, உற்சாகம் பெருகுகிறது. இந்த சந்தர்ப்பம் புதிய சகாப்தமான பனோப்டிக் பொழுதுபோக்கு அனுபவத்தை கொண்டு வருவது மட்டுமின்றி, ஒவ்வொரு வாரமும் ஸ்க்ரீன் இதழின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த நாட்களின் நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது.
"அந்த நாட்களை நம்மால் மீட்டெடுக்க முடிந்தால்" என்ற எண்ணம் சிறிது நேரம் நம் மனதில் நீடித்தது. இறுதியில், வெறும் கனவு காண்பதை நிறுத்திவிட்டு நடப்பதைத் தொடங்க முடிவு செய்தோம், மேலும் நவீன நுட்பங்களைத் தழுவி, ஸ்க்ரீன் அனுபவத்தை வாசகர்களுக்கும் நமக்கும் மீண்டும் வழங்க முடிவு செய்திருக்கிறோம். எனவே, நாங்கள் உங்களை நல்ல பழைய நாட்களுக்கு அழைத்துச் செல்கிறோம் என்பதல்ல; ஆனால் நாம் அந்த நாட்களை இங்கும் இப்போதும், எதிர்காலத்திற்காகவும் கொண்டு வருகிறோம். புதிய தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள் அன்பர்களே! -
Oct 18, 2024 18:01 IST9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் என்ட்ரி ஆகும் ஸ்க்ரீன் இதழ்
1951 இல் நிறுவப்பட்டது, ஸ்க்ரீன் ஒரு காலத்தில் இந்தியாவின் மிகவும் பிரியமான திரைப்பட இதழாக இருந்தது, மக்களுக்கு பொழுதுபோக்கு உலகில் ஒரு சாளரமாக செய்திகளை வழங்கியது. சினிமாவின் பல்வேறு அம்சங்களை புதுமையான மற்றும் நேர்மையான கவரேஜ் மூலம், திரைப்படங்களை ஆழமாக அணுகி பகுப்பாய்வு செய்யும் புதிய தலைமுறை திரைப்பட ஆர்வலர்களை வளர்ப்பதில் ஸ்க்ரீன் முக்கிய பங்கு வகித்தது. மினுமினுப்பு மற்றும் கவர்ச்சியைத் தாண்டி, சினிமா பார்ப்பதில் மிகவும் சிந்தனைமிக்க மற்றும் நுணுக்கமான அணுகுமுறையையும் பத்திரிகை வளர்த்தது.
2015 –ம் ஆண்டு இந்த ஸ்க்ரீன் இதழை விடுவது எங்களுக்கு ஒரு கடினமான முடிவாக இருந்தது, குறிப்பாக இது எங்கள் விசுவாசமான வாசகர்கள் பலரை வருத்தப்பட வைத்தது. ஸ்க்ரீன் அனுபவத்தை இனி உங்களுக்கு வழங்க முடியாது என்ற உண்மையைப் புரிந்துகொள்வது எங்களுக்கு கடினமாக இருந்தது. எப்படியிருந்தாலும், கடந்த காலம் நமக்குப் பின்னால் உள்ளது. இப்போது, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, வாழ்க்கை முழுவதுமாக ஸ்க்ரீனுக்கு வந்துள்ளது, இன்று மும்பையின் வொர்லியில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் தொடங்கும் நிகழ்வில் ஸ்க்ரீன் மீண்டும் வர உள்ளது. -
Oct 18, 2024 17:58 ISTஉங்கள் அன்பான திரைப்பட இதழ் ஸ்க்ரீன் மீண்டும் வந்துவிட்டது
அனைவருக்கும் வணக்கம், மீண்டும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஸ்க்ரீனுக்கு மீண்டும் வரவேற்கிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து உங்களுக்குப் பிடித்த வாராந்திர திரைப்பட இதழ் ஒரு அற்புதமான புதிய அவதாரத்தில். மீண்டும் வந்துவிட்டது. 1951 ஆம் ஆண்டு முதல் பொழுதுபோக்கு செய்திகள் மற்றும் ஆழமான சினிமா பகுப்பாய்வின் நேசத்துக்குரிய ஆதாரமாக, ஸ்க்ரீன் அதன் மகத்தான மறுபிரவேசத்திற்கு தயாராக உள்ளது. இதன் மூலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொழுதுபோக்கு உலகில் உங்களை அழைத்துச் செல்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.