Seema Raja Box Office Collection Day 1: சிவகார்த்தியேகன் நடிப்பில் நேற்று (13.9.18) வெளியான சீமராஜா திரைப்படம், முதல் நாள் வசூலில் முன்னணி நடிகர்களின் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் போட்டிக்கு நிகராக நிற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Seema Raja Box Office Collection Day 1: கோடிகளில் வசூல்!
சிவகார்த்தியேகன் என்ற பெயரை கேட்டாலே அர்பரிக்கிறது ரசிகர் பட்டாளம். பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைத்து ரசிகர்களையும் தன்வசமபடுத்தியுள்ளார் சிவகார்த்தியேகன். இவரின் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான ரெமோ, வேலைக்காரன் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை ருசி பார்த்து வரும் சிவகார்த்தியேகனுக்கு சீமராஜா படம் புதிய சாதனை படைக்க வழிவகுத்துள்ளது. சிவகார்த்திகேயன் + பொன்ராம் = சீமராஜா. இவர்களின் கூட்டணியில் மூன்றாவதாக வெளிவந்திருக்கும் சீமராஜா படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நேற்று வெளியாகியது.
First Day Box Office Collection of Seema Raja Movie
படம் வெளியாதவதற்கு முன்பே, இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு இருந்தது. இந்நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் இந்த முறையும் ஹிட் கொடுப்பாரா? என்ற எதிர்பார்பு சினிமா வட்டாரங்களிலும் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் படம் குறித்த விமர்சனம் ஒருபக்கம் இருந்த போதும், வசூல் ரீதியாக சீமராஜா புதிய சாதனையை படைத்துள்ளது. சீமராஜா தமிழகத்தில் முதல் நாள் வசூல் ரூ 8 கோடியிலிருந்து ரூ 10 கோடி வரை வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.
அப்படி ரூ 10 கோடி வசூல் வந்தால் ரஜினி, விஜய், அஜித்திற்கு அதிக முதல் நாள் வசூல் செய்த லிஸ்டில் சிவகார்த்திகேயனும் இணைந்துவிடுவார் என்பது பலரின் கணிப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் சீமராஜா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சென்னையில் மட்டும் 1.01 கோடி என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஆர்.டி ராஜா ட்விட்டர் பக்கத்தில் படத்தின் வசூல் குறித்து பதிவு செய்துள்ளார். இதுவரை சிவகார்த்திகேயன் திரைப்பயணத்திலேயே முதல் நாள் வசூல் சீமராஜா படத்திற்கு தான் கிடைத்துள்ளது. புதிய சாதனை படைத்துள்ளார் சிவகார்த்திகேயன் என கூறியுள்ளார்.