Seema Raja Box Office Collection Day 2: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் சீமராஜா திரைப்படம் வசூல் மழையை பொழிந்து வருகிறது. 2 ஆம் நாளான இன்று பாக்ஸ் ஆபிஸை உடைப்பது உறுதி என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
Seema Raja Box Office Collection Day 2: சீமராஜா இனி வசூல் ராஜா!
சிவகார்த்திகேயன் தன்னுடைய சினிமா பயணத்தில் மிக கவனமாக படங்கள் தேர்வு செய்து நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு நடிகராக வரும் போது ஆரம்பத்தில் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சிவகார்த்திகேயனும் சந்தித்தார்.
ஆனால், அவருக்கு இருந்த லக்கும், அவரின் கடின உழைப்பும் இன்று சிவகார்த்திகேயனை வேறு தளத்திற்கு அழைத்து சென்று விட்டது. தன்னை வைத்து தயாரிப்பாளார்கள் படம் பண்ணுவார்களா? என்று யோசித்திருந்த சிவா, தற்போது அவரின் நண்பரின் படத்தை தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார் என்றால் அது அவரின் விடாமுயற்சிக்கு மற்றொரு சான்றாகும்.
Second Day Box Office Collection of Seema Raja Movie
இந்நிலையில் பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி இருக்கும் சீமராஜா திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படம் முதல் நாள் வசூலில் பாக்ஸ் ஆபிஸை கலெக்ஷனை அள்ளியது. சென்னையில் மட்டும் சீமராஜா முதல் நாள் வசூலில் இமாலய சாதனையை செய்திருந்தது. சீமராஜாவின் சென்னை கலக்ஷென் ரூ. 1.10 கோடி ஆகும்.
இந்த வசூல் மூலம் சிவகார்த்திகேயன் உச்சபட்ச நட்சத்திரங்களில் வரிசையிலும், பாக்ஸ் ஆபிஸ் மன்னர் என்ற லிஸ்டிலும் சேர்ந்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா சீமராஜா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப் பூர்வ தகவலை வெளியிட்டிருந்தார்.
சீமராஜா முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. இதுவரை 550 காட்சிகள் திரையிடபட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும் என்றும் ராஜா தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் 2 ஆவது நாள் வசூல் குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது படம் சென்னையில் மட்டும் 2 நாள் முடிவில் ரூ. 1.60 கோடி வரை வசூலித்துள்ளது. அதே போல் மற்ற நகரங்களில் படத்தின் வசூல் பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் குறித்த விமர்சனங்கள் கலவையாக வெளியான போது, விடுமுறை தினங்களில் படம் வெளியானதால் சீமராஜா வசூல் வேட்டையை ஆடிக் கொண்டிருக்கிறது.