ராஜ குடும்பத்தின் 33 ஆவது வாரிசான சிவகார்த்திகேயன்!

கனவு கன்னியாக இருந்த சிம்ரன் வில்லியாக களம் இருங்கி இருக்கிறார்.

சிவகார்த்தியேகன்
சிவகார்த்தியேகன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சீமராஜா திரைப்படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கு  திரைப்படம் சீமராஜா. இதில் முதல் முறையாக சமந்தா உடன் சிவகார்த்திகேயன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். கூடவே தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த சிம்ரன் வில்லியாக களம் இருங்கி இருக்கிறார்.

ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய சீமராஜா படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகியது. வழக்கம் போல் பட்டையை கிளப்பும் பாணியில் அமைந்துள்ள சிவகார்த்தியேகனின் டீசரை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யத்துள்ளார். 24AM நிறுவனம் சார்பில் ராஜா இப்படத்தினை தயாரிக்கிறார்.

இமான் இசையில் சூப்பர் சிங்கர் திவாகர் வாரேன் வாரேன் சீமராஜா என ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பலரையும் ஈர்த்தது. இந்நிலையில் நேற்று இரவு வெளியான டீசர் இணையத்தில் தொடர்ந்து முதலிடத்தை பெற்றுள்ளது. டீசர் வெளியாகி ஒரு மணி நேரத்திலேயே 1 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது. 2 மணி நேரத்தில் 4 லட்சம் பார்வைகளை தாண்டி சென்றது.

தற்போது வரை இந்த டீசர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் தொடர்ந்து முதலிடத்தை பெற்று இருப்பதால், ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Web Title: Seemaraja official teaser

Next Story
பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் நுழையும் பிரபலத்தால் ஏற்படும் கலகம்bigg boss tamil 2 பிக் பாஸ் தமிழ் 2
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com