Seethakaathi Public Review : விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் சீதக்காதி. இந்த படத்திற்கு பொதுமக்கள் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். அதே சமயம் சிலர் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.
விஜய் சேதுபதியின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாலாஜி தரணீதரன். மீண்டும் விஜய் சேதுபதி – பாலாஜி தரணீதரன் கூட்டணி அமைத்துள்ள படம் ‘சீதக்காதி’. இது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் கேரியரில் 25-வது படம். இதில் இயக்குநர் மகேந்திரன், நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனை ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
Seethakaathi in Tamilrockers: சீதக்காதி படத்தையும் சூறையாடிய தமிழ்ராக்கர்ஸ்
Seethakaathi Public Review : சீதக்காதி விமர்சனம்
சீதாக்காதி படத்தை பார்த்த இயக்குனர் பா. ரஞ்சித் படக்குழுவை மனதார பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நாம் எல்லோரும் சீதக்காதி இயக்குனர் பாலாஜி தரனை பாராட்டியே ஆக வேண்டும்.சிறந்த எழுத்தாளராகவும், படைப்பாளியாகவும், முழு நேர்மையை காட்டியிருக்கிறார். வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த படம் இன்று வெளியானது. இந்த படத்தின் வெளியீட்டை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த படத்தை பார்த்தவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை சமுக வலைத்தளங்களின் பதிவிட்டிருக்கிறார்கள்.
(சீதக்காதி பிடித்திருக்கிறது. சிந்திக்க வைத்த படம். படம் பார்த்து நல்ல அனுபவம்)
(அய்யாவின் உணர்வுகளுக்குள் மூழ்கிவிட்டேன். சிறந்த நகைச்சுவையயும் உணர்ச்சிகளையும் ஒன்றாக இணைத்து அளித்திருக்கிறார் இயக்குநர்.)
(படம் முதல் பாதி வரை பிரம்மாதமாக இருக்கு. 2ம் பாதிக்கு வெயிட்டிங்)
(சீதக்காதி மிகப்பெரிய தவறு)