/tamil-ie/media/media_files/uploads/2018/12/seethakathi-archana.jpg)
Actor Vijay Sethupathi, Actress Archana, Seethakaathi Release date, சீதக்காதி ரிலீஸ், சீதக்காதி படம், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை அர்ச்சனா
Seethakaathi Tamil Movie: கதாநாயகிகள் கலர் கலராக கோலோச்சிக் கொண்டிருந்த 80-களிலேயே தன்னுடைய தனித்துவத்தை நிலைநாட்டிய நாயகிகளில் அவார்டு புகழ் ப்ளாக்பியூட்டி அர்ச்சனா குறிப்பிடத் தகுந்தவர். சாந்தமாக வீடுகட்ட போராடும் நடுத்தரக் குடும்பப் பெண்ணாக இருந்தாலும் சரி, கமெர்ஷியல் ஸ்டைலாக நீங்கள் கேட்டவை படமாக இருந்தாலும் சரி... அர்ச்சனா ஸ்டைல் என்ற முத்திரை இருக்கும்.
எவர்கிரீன் பாடலான, ‘ஓ வசந்தராஜா’ பாடலிலேயே ஹோம்லியாகவும், கிளாஸாகவும் ஸ்டைலாகவும் வெரைட்டிகளை காட்டியிருப்பார். நடுவில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவைவிட்டே ஒதுங்கியிருந்த அவரை, தங்கர்பச்சான் ஒன்பதுரூபாய் நோட்டுக்காகவும், பரட்டை என்னும் அழகு சுந்தரம் படத்திற்காக சுரேஷ்கிருஷ்ணாவும் மீண்டும் தேடிப்பிடித்து இழுத்துவந்தனர்.
ஆனாலும் அதிக படங்களை ஒத்துக்கொள்ளாமல் இருந்த அர்ச்சனாவை சீதக்காதி படம் மூலம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மீண்டும் மாறுபட்ட கோணத்தில் காட்டியுள்ளார். பொதுவாக இளம் கதாநாயகர்கள் தன்னைவிட வயது அதிகமான ஹீரோயின்களுடன் கதாபாத்திரத்திற்காககூட நடிக்கமாட்டார்கள். ஆனால் இதிலும் விஜய்சேதுபதி தன்னைவிட சீனியர் நடிகையான அர்ச்சனாவுடன் நடித்திருப்பது அந்தகதாபாத்திரத்திற்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
அர்ச்சனா நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடித்த திருப்தியுடன் இருப்பதாக படக்குழுவினர் பெருமையுடன் தெரிவித்தனர். நாடகக்கலை நடிகர்கள் பற்றிய கதையாக உருவாகியுள்ள சீதக்காதியில் அக்கலையின் தற்போதையை நிலையையும் காட்டியிருப்பதாக இயக்குநர் தரப்பில் கூறுகின்றனர். இப்படம் வந்தபின் நாடகக் கலைஞர்களுக்கான மரியாதை இன்னும் உயரும் எனவும் தெரிவித்தனர்.
இவ்வளவு அழுத்தமான கதையம்சத்தில் நடிக்க நடிப்பு ராட்சஷியான அர்ச்சனா போன்ற நாயகிகளால் மட்டுமே தானே முடியும்? டிசம்பர் 20-ம் தேதி திரைக்கு வருகிறது சீதக்காதி.
திராவிட ஜீவா
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.