Seethakaathi Trailer : பல வேடங்களில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு இணையத்தில் வெளியானது.
Advertisment
விஜய் சேதுபதியின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாலாஜி தரணீதரன். தற்போது, மீண்டும் விஜய் சேதுபதி – பாலாஜி தரணீதரன் கூட்டணி அமைத்துள்ள படம் ‘சீதக்காதி’.
இது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் கேரியரில் 25-வது படம். இதில் இயக்குநர் மகேந்திரன், நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனை ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
Seethakaathi Trailer : சீதக்காதி டிரெய்லர் ரிலீஸ்
Advertisment
Advertisements
இப்படத்தின் டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். இந்த அறிவிப்பையொட்டி இன்று வெளியாக இருக்கும் சீதக்காதி டிரெய்லரை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
அதிலும் இறுதியாக விஜய் சேதுபதி பேசியிருக்கும், “ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான்... நானே சரித்திரமாக மாறிவிட்டேன்...” என்ற ஒற்றை வசனம் அனைவரின் கவனத்தையும் இழுத்துள்ளது.