Semabruthi serial Tamil News: நடிகை ப்ரியா ராமன் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் அவரை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது செம்பருத்தி சீரியல் தான். இந்த சீரியலில் இவர் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மிகவும் எதார்த்தமாக நடித்து வரும் இவரின் நடிப்பு இந்த சீரியலில் சுவாரஸ்யமான ஒன்றாக உள்ளது.
‘நேசம் புதுசு’ திரைப்படத்தில் பிரபல நடிகர் ரஞ்சித்துக்கு ஜோடியாக நடித்த ப்ரியா ராமன் நிஜ வாழ்விலும் அவருக்கு ஜோடியானார். நன்றாக சென்ற இந்த ஜோடியின் திருமண வாழ்க்கை சில கருத்து வேறுபாடுகளால் முற்றுக்கு வந்து விவாகரத்து ஆனது. இருப்பினும், இந்த ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டது என்ற செய்தி சமீபத்தில் வைரலானது. கூடவே திருமண நாளன்று இந்த ஜோடி சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலானது.
தனது திருமண நாளை கணவருடன் சேர்த்து கொண்டாடிய பிறகு ஷூட்டிங் ஸ்பாட் சென்ற ப்ரியா ராமனுக்கு சீரியல் குழு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அந்த இன்ப அதிர்ச்சி என்னெவென்றால், சமீபத்தில் வைரலான ப்ரியா ராமன் - ரஞ்சித் ஜோடியின் ஓவியம் தான் அது. இதை சீரியல் குழுவினர் ஒரு பெரிய கிப்ட் வடிவில் செய்து கொடுத்துள்ளனர்.
மேலும் குழுவினரோடு அவரது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியும் உள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார் ப்ரியா ராமன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“