சன் டிவி சீரியலில் இணைந்த ’செம்பருத்தி’ நடிகை…சூட்டிங் ஸ்பாட் கலாட்டா வீடியோ
Sembaruthi actress mounika joins sun tv vanathai pola serial: மௌனிகா வானத்தைப் போல சீரியலில் நடிப்பதைப் பற்றி அந்த சீரியலில் நடித்து வரும் திலக் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் வானத்தைப் போல. கடந்த 2020 டிசம்பர் மாதம் முதல் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தமன்குமார், ஸ்வேதா, அஸ்வந்த் திலக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
Advertisment
இந்த சீரியலில் புதிதாக இணைகிறார் மௌனிகா சுப்பிரமணியன். மௌனிகா சன் டிவியில் ஒளிப்பராகிய தேவதை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். பின்னர் வம்சம், தென்பாண்டி சிங்கம், லக்ஷ்மி கல்யாணம், யாரடி நீ மோகினி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் நடித்திருந்தார். தற்போது வானத்தை போல சீரியல் மூலம் மீண்டும் சன் டிவிக்கு வந்துள்ளார். மௌனிகா இந்த சீரியலில் பூரணி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மௌனிகா வானத்தைப் போல சீரியலில் நடிப்பதைப் பற்றி அந்த சீரியலில் நடித்து வரும் திலக் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் வானத்தைப் போல பார்க்க மறக்காதீர்கள். இன்று என்னுடைய குடும்ப அறிமுகம், வெற்றி குடும்பம் என பதிவிட்டுள்ளார்.