செம்பருத்தி, தேவதையை கண்டேன் சீரியல்களில் நடித்து வரும் பரதா நாயுடுவுக்கு பிப்ரவரியில் திருமணம் நடைபெற உள்ளது.
தென்னிந்திய சின்னத்திரை சீரியல் பிரபலங்களுக்கு இது திருமண காலம் என்றுதான் சொல்ல வேண்டும். மலையாளம் பிக்பாஸ் பிரபலம் ஸ்ரீலட்சுமி குமார் திருணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழில் நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நித்யா ராம், சக நடிகரான கவுதமை விரைவில் கரம்பிடிக்க உள்ளார். இந்த வரிசையில், செம்பருத்தி மித்ராவும் தற்போது இணைந்துள்ளார்.
செம்பருத்தி தொடரில் மித்ரா கேரக்டரில் நடித்து பார்வையாளர்கள் அனைவைரயும் தன்பக்கம் ஈர்த்துள்ளவர் பரதா நாயுடு. இவர் எதிர்மறை கேரக்டரில் நடித்திருந்தாலும், இவரது நடிப்புத்திறமை, பார்ப்பவர்களை வெகுவாக பாராட்டவைக்கிறது.
பரதா நாயுடு சீரியல் நடிப்பில் முன்னணியில் உள்ளபோதும சிறந்த வாழ்க்கையை தகவமைத்துக்கொள்வதிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். சக நடிகரான பரத்தை அவர் விரும்பியபோதும் இருவீட்டாரின் சம்மதத்துடனேயே இந்த திருமணம் நடைபெற உள்ளது.
திருமணம் தொடர்பாக, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு பேட்டியளித்த பரதா நாயுடு கூறியதாவது, தங்களது திருமணம், இருவீட்டாரின் ஒத்துழைப்போடுதான் நடைபெற வேண்டும் என்பதை நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தோம். எங்களது விருப்பத்திற்கு பெற்றோர்களும் எவ்வித தடையும் விதிக்கவில்லை. எங்களது திருமணம், 2020 பிப்ரவரியில் திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளதாக அவர் கூறினார். திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் கலந்துகொண்ட எளிமையான நிகழ்ச்சியாக நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
பரதா நாயுடு, செம்பருத்தி சீரியல் மட்டுமல்லாது தேவதையை கண்டேன் சீரியலிலும் நடித்து வருவதால், அதற்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.