Tamil serial news : ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம். வீட்டில் வேலை செய்பவரின் மகளான பார்வதியை அம்மாவுக்கு தெரியாமல் திருமணம் செய்துக் கொள்கிறார் ஆதி.
எப்போது இந்த உண்மை அம்மா அகிலாண்டேஸ்வரிக்கு தெரியவரும். அவர் ஆதி – பார்வதியை ஏற்றுக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கியிருக்கிறது. செம்பருத்தி சீரியலில் மித்ரா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பாரதா நாயுடு. திருமணம் அல்லது நிச்சயதார்த்தத்திற்கு எடுப்பது போன்ற இவருடைய படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.
புடவை நகைகளுடன், ஒரு நபருடன் பாரதா எடுத்திருக்கும் அந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள், இவர் தான் மித்ரா திருமணம் செய்துக் கொள்ளப்போகும் நபரா என யோசனையில் ஆழ்ந்திருக்கின்றனர். ஆனால், இது உண்மையிலேயே திருமணத்திற்காக எடுக்கப்பட்டதா, வெறும் ஃபோட்டோ ஷூட் மட்டும் தானா எனத் தெரியவில்லை.