New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/Shabana-Shajahan.jpg)
Shabana Shajahan
Shabana Shajahan: ‘செம்பருத்தி’ சீரியலை விட்டு விட்டு சினிமாவுக்குப் போகக் கூடாது என்பதால், ஸ்ட்ரிக்டாக ‘நோ’ சொல்லிவிட்டாராம்.
Shabana Shajahan
Sembaruthi Serial: தமிழ் சீரியல் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கும் சில நடிகைகளுள், ‘செம்பருத்தி’ சீரியலின் பார்வதியும் ஒருவர். அந்த சீரியலின் ஹீரோ ஆதித்யா என்ற கார்த்திக் ராஜுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சீரியலுக்குள் ரொமான்ஸைப் புகுத்தியதில், ‘செம்பருத்தி’க்கு தனியிடமே உண்டு.
”சே.. பார்வதி மாதிரி நமக்கொரு கேர்ள் ஃபிரெண்ட் / மனைவி கிடைக்க மாட்டாளா?” என இளைஞர்களை ஏங்க வைக்கும் அளவுக்கு, நடிப்பில் பட்டையைக் கிளப்பி வருகிறார் பார்வதி. இவரது உண்மையானப் பெயர் ஷபானா ஷாஜகான். மும்பையில் பிறந்து வளர்ந்த மலையாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்.
மகாராஷ்டிராவின் கல்யாணில் உள்ள, ஹோலி கிராஸ் கான்வென்ட்டில் பல்ளிப் படிப்பை முடித்தார் ஷபானா. அதோடு, சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில், பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷனில் இளங்கலை பட்டமும் பெற்றிருக்கிறார். மாடலாக தனது கரியரை தொடங்கிய ஷபானா, பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். அதன் மூலம், மலையாளத்தில் ஒளிபரப்பான ‘விஜயதசமி’ எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இந்த சீரியல் தான், ஷபானாவை ’செம்பருத்தி பார்வதியாக’ மாற்றியிருக்கிறது.
சின்னத்திரை ரசிகர்கள் ஷபானாவுக்கு தீவிர ரசிகர்களாக இருக்க, அவரோ தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகையாம்! அதோடு தனது ரோல்மாடலாகவும் அவரைப் பின்பற்றுகிறாராம் ஷபானா. செம்பருத்தி சீரியலைப் பார்த்து அவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் தனக்கு தமிழக மக்களின் மனதில் தனியிடம் பிடித்துத் தந்த ‘செம்பருத்தி’ சீரியலை விட்டு விட்டு சினிமாவுக்குப் போகக் கூடாது என்பதால், ஸ்ட்ரிக்டாக ‘நோ’ சொல்லிவிட்டாராம். ஒரு வேளை சினிமாவில் நடித்தால், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, சிம்பு ஆகியோருடன் தான் நடிக்க விரும்புவதாக, கடந்தாண்டு ஒரு நேர்க்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
ஷபானாவின் ஆசை நிறைவேற வாழ்த்துவோம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.