Advertisment

கார் டிரைவரை கரம் பிடித்த ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை!

’டிரைவரா’ன்னு யோசிக்காதீங்க, அந்தப் பயணத்துல அவர் டிரைவரான கதையைக் கேட்டுத் தான் எனக்கு அவர் மேல மரியாதையே வந்துச்சு. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sembaruthi Serial Artist Jenifer pongal celebration

Sembaruthi Serial Artist Jenifer gets married

Sembaruthi Serial Jennifer: சீரியல் பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்பு, செம்பருத்தி சீரியலில் ஆதிக்கும் - பார்வதிக்கும் நடந்த திருமணம் எப்போது அகிலாண்டேஸ்வரிக்கு தெரிய வரும் என்பது தான். ஆனால் அது தெரிந்து விட்டால், சுவாரஸ்யமும் கதையும் சுருங்கிவிடும் என்பதால், இப்போதைக்கு தெரிய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

Advertisment

இந்நிலையில் ஆதியின் ஜோடி தனது காதலரை கரம் பிடித்துள்ளார். உடனே பார்வதியா? என்று யோசிக்க வேண்டாம். ஆதியின் மீது ஆசைப்படும் உமாவுக்கு தான் தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. உமாவின் நிஜப்பெயர் ஜெனிஃபர், சென்னையில் ஒரு கோயிலில் வைத்து தனது காதலர் சரவணனை கரம் பிடித்துள்ளார்.

இதுப்பற்றி தெரிவித்த ஜெனிஃபர், “மூணு வருஷத்துக்கு முன்னாடி,  சென்னையில இருந்து கார் பிடிச்சு மதுரைக்கு ஒரு ஃபங்ஷனுக்காகக் குடும்பத்தோட போனோம். அந்தக் காரை ஓட்டிட்டு வந்தவரு தான் என் கணவரா வருவாருன்னு நான் அப்போ நினைக்கல.  ’டிரைவரா’ன்னு யோசிக்காதீங்க, அந்தப் பயணத்துல அவர் டிரைவரான கதையைக் கேட்டுத் தான் எனக்கு அவர் மேல மரியாதையே வந்துச்சு.

பி.இ முடிச்ச அவருக்கு ஒரு பெரிய கம்பெனியில வேலையும் கிடைச்சிருக்கு. சம்பளம் பத்தாயிரம்னு சொல்லியிருக்காங்க. 'இன்ஜினீயரிங்' முடிச்சிருக்கேன்'னு சொன்னதுக்கு, ’அதுக்கு மவுசு போய் பல வருஷமாச்சே’னு சொல்லிட்டாங்களாம். இந்த சம்பளத்துக்கு உயிர கொடுத்து உழைக்கிறத விட, பேசாம எதாச்சும் பிஸினஸ் பண்ணலாம்ன்னு தோணிருக்கு.

அப்போ தான், டிரைவிங் கொடுத்திருக்கு. கால் டிரைவரா கொஞ்ச நாள் இருந்திருக்கார். பிறகு டிரைவிங் சொல்லிக் கொடுத்திருக்கார். இப்போ ட்ராவல் லைன்ல ஆல் இன் ஆல். சொந்தமா பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். அப்புறம் அவங்க வீட்ல பொண்ணு பாத்துட்டு இருக்கும் போது, நேரா எங்க வீட்ல வந்து ஜெனிஃபர கல்யாணம் பண்ணி கொடுங்க. எனக்கு அவங்கள நல்லா தெரியும், அவங்களுக்கும் என்ன நல்லா தெரியும்ன்னு பட்டுன்னு கேட்டுட்டாரு. எங்க அப்பா அம்மாவுக்கும் அவர் மேல நல்ல மரியாதை இருந்தனால, இன்னும் கொஞ்சம் யோசிச்சு, ஓகே சொல்லிட்டாங்க.

சீரியல் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைச்சிட்டு இருந்தோம். இனியும் வெயிட் பண்ணுனா அப்றம் 60-ம் கல்யாணம் தான் நடக்கும்ன்னு ஃபிரெண்ட்ஸ்லாம் கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க. அதனால, டக்குன்னு கல்யாணத்த முடிச்சாச்சு” என்கிறார்.

 

Tv Serial Zee Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment