New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Sembaruthi-Serial.jpg)
Sembaruthi Serial
நீராவி பாண்டியன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்களாம்.
Sembaruthi Serial
Sembaruthi Serial : ரசிகர்கள் திரைப்படங்களுக்கு இணையாக, தமிழ் தொலைக்காட்சி சீரியல்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அதனால் சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் வெகு எளிதாக, இல்லத்தரசிகள் மத்தியில் ஆழமான இடத்தைப் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியல்களில் ஒன்று.
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
ஒவ்வொரு பாடலையும் புதிதாகவே உருவாக்குகின்றேன் – இளையராஜா
2017-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் காதல் பின்னணியை மையமாக கொண்டது. தெலுங்கில் ’முத்த மந்தாரம்’ என்ற தொடரின் ரீமேக் தான் செம்பருத்தி. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும் நடிக்கிறார்கள். இந்நிலையில் செம்பருத்தி சீரியல் இயக்குனர் நீராவி பாண்டியன் மீது துணை நடிகைகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
தைப்பூச தினத்தில் ஜோதி தரிசனத்தைக் காண வடலூருக்கு படையெடுக்கும் பக்தர்கள்!
அதாவது சென்னை வானகரத்தில் நடைபெற்ற செம்பருத்தி சீரியல் படப்பிடிப்பின் போது சரியாக நடிக்கவில்லை என இயக்குனர் நீராவி பாண்டியன் துணை நடிகைகளின் மனம் புண்படும்படி திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த நடிகைகள் அண்மையில் திருவேற்காடு காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளனர். நீராவி பாண்டியன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்களாம். இதனையடுத்து போலீசார் இயக்குனர் நீராவி பாண்டியனை அழைத்து விசாரித்திருக்கிறார்கள். தனது தவறுக்கு துணை நடிகைகளிடம் இயக்குனர் வருத்தம் தெரிவித்ததையடுத்து பிரச்னை சுமூகமாக முடிந்துள்ளது. இந்தத் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.