ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான செம்பருத்தி சீரியல் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் அதன் ஆரம்பம் முதல் இப்போது வரை சீரியல்களே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியும் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களிலேயே மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது செம்பருத்தி சீரியல்தான். செம்பருத்தி சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று ஏராளமான ரசிகர்களை ஈர்த்தது. செம்பருத்தி சீரியல் 2017, அக்டோபர் 16 முதல் தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
செம்பருத்தி சீரியல் வரவேற்பைப் பெற்றதற்கு அதில் நடித்த நடிகர்கள் முக்கிய காரணம். செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக கார்த்திக் ராஜ் நடித்தார். ஹீரோயினாக ஷபானா நடித்தார். இவர்களுடன் பிரியா ராமன் நடித்து வருகிறார். இந்த சிரியல் டி.ஆர்.பி-யில் டாப் சீரியல்கள் வரிசையில் இடம்பெற்று நன்றாக போய்க்கொண்டிருந்தபோது, ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த கார்த்திக் ராஜ் சீரியலில் இருந்து விலகினார். இதனால், அவருக்கு பதிலாக அக்னி ஹீரோவாக நடித்து வருகிறார்.
செம்பருத்தி சீரியலில் ஹீரோ மாற்றப்பட்டதில் இருந்து சீரியலுக்கு வரவேற்பு குறைய ஆரம்பித்தது. சீரியலில் ஹீரோ மாற்றியதை ரசிகர்களால ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், ரசிகர்கள் பலரும் அதன் விருவிருப்பான திருப்பங்களுக்காக பார்த்து வந்தனர்.
இந்த நிலையில்தான், செம்பருத்தி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். செம்பருத்தி சீரியல் முடிக்கப்படுகிறதா என்பது சீரியல் குழுவினர் யாரும் அதிகாரப் பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும், ரசிகர்கள் பலரும் செம்பருத்தி சீரியல் விரைவில் முடியப்போகுதா என்று கேட்டு வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், செம்பருத்தி சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் மாற்றப்பட்டதால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் சிலர் செம்பருத்தி சீரியல் முடியப்போகுதா முடியட்டும் என்றும் சமூக ஊடகங்களில் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“