New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/priya-raman.jpg)
Sembaruthi serial Priya Raman jolly shooting spot video goes viral: செம்பருத்தி சீரியல் வில்லி வனஜாவின் கையை செல்லமாக கடிக்க பார்க்கும் ப்ரியா ராமன்; ஷூட்டிங் ஸ்பாட் வைரல் வீடியோ
செம்பருத்தி சீரியலில் டெரராக நடிக்கும் ப்ரியா ராமன் செட்டில் உடன் நடிப்பவர்களுடன் ஜாலியாக விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வள்ளி திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ப்ரியா ராமன். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார். பின்னர் திரைப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், சின்னத்திரை பக்கம் திரும்பினார் ப்ரியா ராமன்.
ஜெயா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஸ்ரீதுர்கா சீரியல், தமிழில் இவரது முதல் சீரியலாகும். மேலும், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக, சன் டிவியில் பொறந்த வீடா புகுந்த வீடா சீரியலில் நடித்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியலில் ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி என்ற திமிரான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ப்ரியா ராமன் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளிவந்தன. சீரியலில் அவர் சிறைக்குச் செல்வதுபோல் காட்சிகள் இருந்ததால், அவர் சீரியலில் இருந்து விலகுகிறார் என்று வதந்தி பரவிய நிலையில், அவர் சிறையிலிருந்து திரும்பியுள்ளதால், அவர் தொடர்ந்து சீரியலில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
சீரியலில் எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் அகிலாண்டேஸ்வரியாக நடிக்கும் ப்ரியா ராமன், ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்ற நடிகைகளுடன் ஜாலியாக விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வில்லி வனஜாவாக நடித்து வரும் லக்ஷ்மியின் கையை செல்லமாக கடிக்கப் பார்க்கிறார் ப்ரியா ராமன்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், டெரராக நடிக்கும் ப்ரியா ராமனா இவ்வளவு ஜாலியாக விளையாடுவது என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ப்ரியா ராமன் தற்போது விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலிலும் நடித்து வருகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.