sembaruthi serial shabana : பெரும்பான்மையான மக்கள் இன்று சீரியலை விரும்பிப்பார்க்கின்றனர்,அதனால் சீரியலில் நடிக்கும் நடிகைகள் சினிமா நடிகைகள் அளவிற்கு பேரும் புகழும் பெற்றுள்ளனர். சொல்லப்போனால் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு இணையத்தில் ரசிகர்கள் அதிகம்.
சீரியலில் இருந்து சினிமாவிற்கு சென்ற ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் போன்ற நடிகைகளின் இவ்வளவு பெரிய மாற்றத்திற்கு இந்த சீரியல் ரசிகர்கள் தான் காரணம். அதற்காகவே சீரியல் இயக்குனர்கள் பார்த்து பார்த்து கேரளா, மும்பையில் இருந்து நடிகைகளை தேர்வு செய்து சீரியல்களில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு சினிமா நடிகைகளுக்கு நிகராகவும் சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ் குடும்பங்களில் அவர்களின் வீட்டு பெண்ணாகவே மாறிப்போன ஜீ தமிழ் ஷபானா இல்லை இல்லை செம்பருத்தி பார்வதி என்றால் தான் அனைவருக்கும் தெரியும். பார்வதி பலரின் உள்ளம் கவர்ந்த சீரியல் நடிகையாக முதலிடத்தில் உள்ளார். அவரின் லைஃப்ஸ்டைல் குறித்து பார்க்கலாம் வாங்க.
1. சொந்த ஊர்:
பார்வதி நன்றாக தமிழ் பேச தெரிந்த பெண்ணாக இருப்பதால் அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவரின் சொந்த ஊர் கேரளா. தற்போது குடும்பத்துடன் மும்பையில் தங்கி இருக்கிறார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த பார்வதி பி.பி.ஏ படித்தவர்.
2. செம்பருத்தி வாய்ப்பு:
மலையாள சீரியல் தான் ஷபானாவில் முதல் அறிமுகம். அந்த தயாரிப்பு டீம் மூலம் தமிழில் செம்பருத்தியில் அறிமுகமானார். ஆரம்பத்தில் ஷபானா சீரியலில் நடிப்பதில் அவரின் குடும்பத்தார் யாருக்கும் விருப்பம் இல்லை. கடைசியில் இன்று அவர் அடைந்திருக்கும் புகழ் மொத்த குடும்பத்தையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
3. விருப்பம்:
டான்ஸ் என்றால் ஷபனாவுக்கு உயிர். ஆரம்பத்தில் திருமணம், கலை நிகழ்ச்சிகளில் சிறப்பு நடனத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த பழக்கம் இப்போதும் டிக் டாக்கில் தொடர்ந்து வருகிறது.
4. சர்ச்சை:
செம்பருத்தி சீரியலில் ஷபானாவுக்கு ஜோடியாக நடிப்பவர் ஆஃபிஸ் புகழ் கார்த்தி. சில ஆண்டுகளுக்கு முன்பு சீரியலில் இவர்கள் நெருக்கம் கூடியதாகவும், ஏற்கனவே திருமணமான கார்த்தி இவருடன் சேர்ந்து நெருங்கி பழகுவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் ஆக இருப்பதாகவும் ஏகப்பட்ட வதந்திகள் உலா வந்தன. ஆனால் இவை அனைத்துக்கும் ஷபானா மறுப்பு தெரிவித்தார்.
5. ரோல் மாடல்:
நடிகை ஷோபனா. அவரை நேரில் பார்த்து ஒருமுறையாவது பேச வேண்டும் என்பது ஷபானாவின் நீண்ட நாள் ஆசை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.