New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/sembaruthi-aadhi-parvathy.jpg)
இந்த பிரச்னையில் சட்டப்படி நேர்மையாக செயல்பட்டு எதிர்கொண்டால் நீதி கிடைக்க தாமதம் ஆகும். அதனால், தற்போது அம்மாவுக்கு தெரியாமல் இந்த பிரச்னையை தீர்க்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. அதற்கு நாம் மேத்தாவை ஏமாற்ற வேண்டும் என ஆதி ஒரு மாஸ்டர் பிளானைக் கூறுகிறார்.
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியலில் இன்று நடக்கும் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.
செம்பருத்தி சீரியலில் இன்று ஆதிக்கடவூர் பரம்பரை வாரிசான அகிலாவின் பெயரை கெடுக்கும் விதமாக ஆதிக்கடவூர் டிரஸ்ட் பெயரில் பொய்யாக மோசடி யார் என விசாரிக்க அகிலான்வின் மகன் ஆதியும் மருமகள் பார்வதியும் பெங்களூரு செல்கிறார்கள். பெங்களூரு சென்ற ஆதியும் பார்வதியும் அங்கே வருமான வரித்துறை அலுவலகத்தில் இதைப் பற்றி விசாரிக்கிறார்கள். வருமானவரித் துறை அலுவலகத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஆதியும் பார்வதியும் ரகுநாத் மேத்தா அறைக்கு சென்று விசாரிக்கிறார்கள்.
ரகுநாத் மேத்தா தனது அலுவலகத்திற்கு தன்னைத் தேடி வந்த ஆதியிடம் சவால் விட்டு பேசுகிறார். இந்த மோசசியை நான் தான் செய்தேன் உன்னால என்ன முடியுமோ செய்துகொள் என கூறி சவால் விடுகிறார். அதுமட்டுமில்லை. ரகுநாத் மேத்தா தனது ஆட்களை வைத்து ஆதியை அலுவலகத்தை விட்டு வெளியே விரட்டுகிறார். ஆதியை வெளியே துரத்தியது மட்டுமில்லாமல், மேத்தா அங்கே நடந்த விஷயங்களை அகிலாவின் ஜென்ம எதிரியான நந்தினிக்கு போன் செய்து விவரமாகக் கூறுகிறார். நந்தினி இதைக்கேட்டு சந்தோஷமடைகிறாள்.
ஆதி இந்த விஷயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கும் நேரத்தில், மேத்தா அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு நபர் ஆதியைத் தேடி அவன் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு வருகிறார். அந்த நபர் தன்னை ஆதியிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, மேத்தா பற்றிய பல்வேறு ரகசியங்களைக் கூறுகிறார். இதை ஏன் நீங்க வந்து சொல்கிறீர்கள் என்று ஆதி கேட்க, தான் ஆதிக்கடவூர் டிரஸ்ட் மூலமாகத்தான் படித்து வளர்ந்தேன் என்று கூறுகிறார். இதுதான் தர்மம் தலைக் காக்கும் என்று கூறுவார்கள்.
அந்த நபர், மேத்தா ஒரு மோசடிக்காரர் என்பதைக் கூறுவதோடு மேத்தாவுக்கு இருக்கும் வீக்னஸ் பற்றியும் கூறுகிறார். மேத்தாவுக்கு வைரங்கள் என்றால் ரொம்ப புடிக்கும். மேத்தா பல விதமான வைரங்களை வாங்கி வீட்டில் வைத்திருக்கிறார். அதோடு, மேத்தா தற்போது சொர்ணபுரி வைரத்தை தான் தேடிவருகிறார் என்றும் கூறுகிறார்.
இதைக் கேட்ட ஆதி, இந்த பிரச்னையில் சட்டப்படி நேர்மையாக செயல்பட்டு எதிர்கொண்டால் நீதி கிடைக்க தாமதம் ஆகும். அதனால், தற்போது அம்மாவுக்கு தெரியாமல் இந்த பிரச்னையை தீர்க்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. அதற்கு மேத்தாவை நாம் ஏமாற்ற வேண்டும் என ஒரு மாஸ்டர் பிளானைக் கூறுகிறார்.
அந்த மாஸ்டர் பிளான் என்ன, எப்படி என மற்றவர்கள் கேட்க மேத்தாவுக்கு சொர்ணபுரி வைரத்தை விற்று 10 கோடி ருபாய் வாங்கி இன்கம் டாக்ஸ் அலுவலகத்தில் கட்டிவிடலாம் என ஆதி பக்காவான மாஸ்டர் பிளானை சொல்கிறார்.
இதைக் கேட்ட மேத்தாவின் அலுவலகத்தில் இருந்து வந்த நபர், நீங்கள் பொய் வைரத்தை கொடுத்து மேத்தாவை ஏமாற்ற முடியாது என சொல்கிறார். ஆனால், ஆதி, நான் பொய் வைரத்தைக் காட்டப்போவதில்லை. நான் ஒரிஜினல் வைரத்தை காட்டப்போவதாக கூறுகிறார். ஆதிக்கடவூர் பரம்பரைக்கு சொந்தமான வைரத்தை ரிஸ்க் எடுத்து பயன்படுத்தி இந்த பிரச்னையில் இருந்து மீள வேண்டும் என்று ஆதி தனது திட்டத்டஹி கூறுகிறார். செம்பருத்தி சீரியலின் இன்றைய எபிசொடு இத்துடன் நிறைவடைகிறது. நாளைய எபிசோடில் ஆதியின் மாஸ்டர் பிளான் பலனளிக்குமா என்பதைக் காண காத்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.