sembaruthi serial today : டிவி சீரியல் லிஸ்டில் மிகப் பெரிய போட்டியாக, டிஆர்பி-யில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வரும் செம்பருத்தி சீரியலில் ஆதி – பார்வதி கல்யாண உண்மை பிரியாவுக்கு தெரிந்து விட்டது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் செம்பருத்தி சீரியல் பற்றி அறிமுகவே தேவையில்லை.
ஆரம்பத்தில் இந்த சீரியல் சாதாரணமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், திடீரென்று டி.ஆர்.பி-யில் கடந்த மாதம் முதலிடத்திற்கு வந்துவிட்டது. இதனால், இந்த சீரியலில் இடம்பெற்ற ஒட்டு மொத்த குழுவினரும் குஷியில் உள்ளனர்.
இந்த தொடரில் நடித்து வரும் செம்பருத்தி எனும் சபானா கேரக்டர் சீரியல் பிரியர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு சீரியல் ஹீரோவான கார்த்தி. இவருக்கு இருக்கும் பெண் ரசிகைகள் சமூகவலைத்தளங்களில் தினம் தினம் போஸ்டர்களாக திகைக்க வைத்து விடுகின்றன. ஆதி – பார்வது கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என தமிழகமே காத்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாக மின்னல் போல் வந்து பார்வதியை கரம் பிடித்தார் ஆதி.
ஆனால் இந்த உண்மை இவர்கள் இருவரையும் தவிர யாருக்கும் தெரியாது. மறைந்து மறைந்து இருவரும் காதல் செய்து வந்தனர். ஆதியின் அம்மா அகிலாண்டேஸ்வரிக்கு மட்டும் இந்த உண்மை தெரிந்தால் வீட்டில் ஒரு பிரளயமே வெடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நேரத்தில் தான் மூத்த மருமகள் பிரியா ஆதி- பார்வதிக்கு திருமணம் ஆனதை கண்டுப்பிடித்து விட்டார். இனி இந்த வீட்டில் தினம் தினம் தீபாவளி தான்.
Bharathi kannamma: தன் விணை தன்னை சுடும் என்பதை இனியாவது அஞ்சலி புரிந்துக் கொள்வாரா? என்பது தெரியவில்லை. கண்ணம்மாவிற்கு விஷம் வைக்க நினைத்து கடைசியில் அந்த விஷம் கலந்த ஜூசை அஞ்சலியே குடித்து விடுகிறார்.
என்னது?! ???? உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா?
பாரதி கண்ணம்மா – இன்று இரவு 8:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/8UZEQ76iab
— Vijay Television (@vijaytelevision) September 18, 2019
முதலிரவில் மயங்கி விழும் அஞ்சலியை குடும்பத்தார் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு போனதும் மருத்துவர் அஞ்சலி சாப்பிட்ட உணவில் விஷம் இருப்பதை உறுதி செய்ய ஒட்டு மொத்த குடும்பமும் கண்ணம்மாவை வசைப்பாடுகிறது. இதுபோதாது என்று, அஞ்சலியின் அம்மா கல்யாணம் ஆன மறுநாளே தனது மகளை வீட்டிற்கு அழைத்து செல்வதாக இடியை போடுகிறார். பழி என்னவோ கண்ணம்மா பக்கமே விழுகிறது பாவம். இதை வைத்து பகடை விளையாட பிளான் போட்டு விட்டார் வெண்பா.