New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/12/Sembaruthi-Serial.jpg)
Sembaruthi Serial zee tamil
அகிலாவின் கேண்டிடேட் மித்ராவை எதிர்த்து நின்று கம்பெனியின் குட்வில் அம்பாசிடர் ஆகியிருக்கிறார் பார்வதி.
Sembaruthi Serial zee tamil
Sembaruthi Serial on Zee Tamil : ’ஜி தமிழ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலின் ஆதி - பார்வதிக்கு ரசிகர்கள் ஏராளம்.
கம்பெனியின் குட் வில் அம்பாசிடர் ஆகிவிட்ட பார்வதி இனிமேல் சமையல் வேலைகளை செய்யக்கூடாது என்பது அகிலாண்டேஸ்வரியின் உத்தரவு. பார்வதி ஜெயித்ததோ, அகிலாவின் கேண்டிடேட் மித்ராவை. ”காலையில் இருந்து ஜலதோஷம் தலைவலின்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். யாரும் இன்னும் தூதுவளை ரசம் வச்சு தர மாட்டேங்கறாங்கன்னு” புலம்பிக் கிட்டே லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருக்கிறார் அகிலாண்டேஸ்வரி. அப்போது வீட்டின் சமையல்கார பெண்மணி ரசத்துடன் வந்து நிற்கிறார்.
அந்த ரசத்தை எடுத்து வாயில் வைத்த அகிலாண்டேஸ்வரி, நான் எத்தனை நாள் பார்வதி கையால ரசம் குடிச்சிருக்கேன். இது என்ன ரசமா என்ற விதத்தில், சமையல்கார பெண்மணியை திட்டுகிறார். இத்தனை நாள் பார்வதியுடன் இருந்து, நீ எதையுமே கத்துக்கலையா என கோபமாகிறார். அப்போது கையில் ரசத்துடன் வந்து நிற்கிறாள் பார்வதி. அதைப் பார்த்த அகிலாண்டேஸ்வரி அதிர்ச்சியாகி, ‘உன்னை நான் சமையல்கட்டுக்கு போகக் கூடாதுன்னு சொன்னேன்ல, நீ என் பேச்சை மீறிட்ட’ என்கிறார்.
அதற்கு, ‘இல்லம்மா இது அவுட் ஹவுஸில் வச்ச ரசம். இந்த இடத்துல நான் உங்க பேச்ச கேக்க மாட்டேன். ஏன்னா எனக்கு உங்க ஆரோக்கியம் முக்கியம்’ என்கிறாள் பார்வதி. ஒரு தூதுவளை ரசத்தால் ஒரு எபிசோடையே முடித்திருக்கிறார்கள் செம்பருத்தி குழுவினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.