சன் டிவி அன்பே வா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 80களின் முன்னணி சினிமா நடிகை!
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் அன்பே வா சீரியலில் தமிழ் சினிமா உலகி 80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மூத்த நடிகை என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் அன்பே வா சீரியலில் தமிழ் சினிமா உலகி 80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மூத்த நடிகை என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர், நடிகைகளாக இருந்தவர்கள் பிறகு சின்னத்திரை நோகி வருவது என்பது தமிழ் சின்னத்திரையில் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. சிலர், ஒரே நேரத்தில் சீரியல்களிலும் சினிமாவிலும் நடித்து வருகிறார்கள்.
Advertisment
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த ராதிகா, நளினி, அம்பிகா, குஷ்பு, தேவையாணி என பலரும் டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்கள் இடையே வரவேர்பை பெற்றுள்ளனர்.
சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து இப்போது வரை பார்வையாளர்களை ஈர்ப்பதில் அதன் சீரியல்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றான அன்பே வா பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisment
Advertisements
அதோடு, அன்பே வா சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வருவதால் டி.ஆர்.பி-யிலும் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் அன்பே வா சீரியலில் தமிழ் சினிமா உலகி 80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மூத்த நடிகை என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாரும் அல்ல. நடிகை அம்பிகாதான் அன்பே வா சிரியலில் என்ட்ரி ஆக உள்ளார். நடிகை அம்பிகா, அன்பே வா படக்குழுவினருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.
மூத்த நடிகை அம்பிகாவின் வரவால் அன்பே வா சீரியல் மேலும் ரசிகர்களிம் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அம்பிகா ஏற்கெனவே, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக ஜெயாம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"