அட, இது எப்போ? சீரியலுக்கு வந்த செந்தில் – ராஜலட்சுமி!

மக்களிசை பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்த பாட்டு ஜோடி செந்தில் – ராஜலட்சுமி டிவி சீரியலில் நடிக்க வந்துள்ள தகவலைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், நெட்டிசன்கள் அட இது எப்போ என்று வியப்புடன் கேட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

super singer fame senthil ganesh, super singer fame rajalakshmi, senthil ganesh rajalakshmi, singer couple senthil rajalaskshmi, செந்தில் - ராஜலட்சுமி, விஜய் டிவி, சூப்பர் சிங்கர் சீசன் 6, டிவி சீரியலில் நடிக்கும் செந்தில் ராஜலட்சுமி, கலர்ஸ் தமிழ் டிவி, இதயத்தை திருடாதே சீரியல், vijay tv, colours tv tamil, colours tamil, idhayathai thirudathe serial, senthil, rajalashmi, senthil rajalakshmi acting in tv serial

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 முழுவதும் ஹீரோ ஹீரோயின் போல கலக்கிய மக்களிசை பாடகர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி ஜோடி இப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் சீரியலில் நடிக்க வந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அட இது எப்போது, சீரியலிலும் கலக்குங்க என்று இந்த பாட்டு ஜோடிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு நல்ல பாடகர் ரசிகர்களைக் கவர்ந்து அந்த நிகழ்ச்சி முழுவதும் ஒரு ஹீரோ போல அந்த சீசனை வேற லெவலுக்கு எடுத்துச் செல்வார்கள். அதனால்தான், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, சூப்பர் சிங்கர் சீசன் 8 வரை நடந்து முடிந்துள்ளது. விஜய் டிவில் அதுவரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் சினிமா பாடல்களை மட்டுமே பிரபலமான நிலையில் சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் சினிமா, டிவி போன்ற வெகுஜன ஊடகங்களில் கவனம் பெறாத மக்களிசைப் பாடல்களைப் பாடி கணவன் மனைவியாக ரசிகர்களின் பேராதரவைப் பெற்றனர் மக்களிசைப் பாடகர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி ஜோடி. சூப்பர் சிங்கர் சீசன்6 முழுவதும் இவர்கள் சேர்ந்து பாடும்போது கிட்டத்தட்ட ஒரு சினிமா – நாடகம் போல அவ்வளவு அழகாக இருந்தது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முடிவில் செந்தில் கணேஷ் டைட்டிலை வென்றார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு, இவருவக்கும் சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. வெளிநாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளையும் நடத்தினர். இதையெல்லாம்விட, செந்தில் கணேஷ் ஒரு சினிமாவில் ஹீரோவாகவும் நடித்தார். இப்படி, இந்த பாட்டு ஜோடி ரசிகர்களின் பேராதரவுடன் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில், செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி ஜோடி இப்போது டிவி சீரியலில் நடிக்கத் தொடங்கியுள்ளனர். கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியலில் நடிக்க வந்துள்ளனர். செந்தில் கனேஷ் – ராஜலட்சுமி இருவரும் இதயத்தை திருடாதே சீரியல் நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி அவர்கள் சீரியலில் நடிப்பதை உறுதி செய்துள்ளது. இந்த சீரியலில், நவராத்திரி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் அவர்கள் பாடல் பாட வந்திருப்பார்கள் என தெரிகிறது.

மக்களிசை பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்த பாட்டு ஜோடி செந்தில் – ராஜலட்சுமி டிவி சீரியலில் நடிக்க வந்துள்ள தகவலைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், நெட்டிசன்கள் அட இது எப்போ என்று வியப்புடன் கேட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Senthil ganesh rajalakshmi acting in tv serial fans wishes

Next Story
வாக் அவுட்-டா? எலிமினேஷனா? நமீதா மாயமான பின்னணி என்ன?bigg boss tamil 5, bigg boss walk out, bigg boss tamil 5, bigg boss, vijay tv, namitha marimuthu walk out, பிக் பாஸ் 5, பிக் பாஸ், விஜய் டிவி, நமீதா, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து, திருநங்கை மாரிமுத்து, கமல்ஹாசன், namitha elimination, kamal haasan, bigg boss contestant namitha, namitha transgender
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X