Advertisment

புது வீடு; வெளிநாடு நிகழ்ச்சி; அரசியல் நட்பு - 'பலே' செந்தில் கணேஷ்! (ஸ்பெஷல் போட்டோஸ்)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புது வீடு; வெளிநாடு நிகழ்ச்சி; அரசியல் நட்பு - 'பலே' செந்தில் கணேஷ்! (ஸ்பெஷல் போட்டோஸ்)

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி.

Advertisment

publive-image

நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, மேடையில் பாடுவது தான் இவர்களது சிறப்பு அம்சம். இரண்டு பேரும் வெவ்வேறு அணிகளில் பாடி தங்களது திறமையை நிரூபித்து வந்தனர்.

publive-image

சூப்பர் சிங்கர் 6வது சீசனில் நாட்டுப்புறப் பின்னணியில் பாடல்களை பாடி மக்களைக் கவர்ந்தவர்கள் செந்தில் – ராஜலட்சுமி தம்பதி.

இவர்களே பாடலை எழுதி, அதை பாடியும் வந்தனர்.

publive-image

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அந்த சீசனை இவர்களுக்காவே நேயர்கள் அதிகம் பார்த்தனர்.

இறுதியில், சூப்பர் சிங்கர் டைட்டிலை செந்தில் கணேஷ் தட்டிச் செல்ல, சூட்டோடு சூடாக ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் ‘என்ன மச்சான்’ பாடலை இத்தம்பதி பாடினர்.

publive-image

பாடலும் ஹிட்டாக, அடுத்தடுத்த இவர்களுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு வந்துக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், ‘கரிமுகன்’ எனும் படத்தில் ஹீரோவாகவும் செந்தில் கணேஷ் நடித்தார்.

publive-image

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருவரும் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

publive-image

தமிழகம் தாண்டி சிங்கப்பூர், மலேசியா, லண்டன், துபாய் போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலும் இவர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment